தேசீய கொடியும் வந்தேமாதர கீதமும் என்றும் அழியா!

காங்கிரஸ்வாதிகள் மட்டுமின்றி இதர கட்சியாருமுள்ள கூட்டமொன்றில் எதிர்ப்பு இருக்குமானால் தேசீயக் கொடியை ஏற்றக் கூடாதென்று காங்கிரஸ்வாதிகளுக்கு மகாத்மா காந்தி உபதேசம் செய்கிறார். 
தேசீய கொடியும் வந்தேமாதர கீதமும் என்றும் அழியா!

காங்கிரஸ்வாதிகள் மட்டுமின்றி இதர கட்சியாருமுள்ள கூட்டமொன்றில் எதிர்ப்பு இருக்குமானால் தேசீயக் கொடியை ஏற்றக் கூடாதென்று காங்கிரஸ்வாதிகளுக்கு மகாத்மா காந்தி உபதேசம் செய்கிறார். 

""கலப்பான கூட்டத்தில் எதிர்ப்பு ஏற்பட்டால், கொடியை ஏற்றக்கூடாதென்று நான் கூறுகிறேன். காலேஜுகள், ஸ்தல ஸ்தாபனங்கள், முனிசிபல் சபைகள் முதலியவற்றில் அவ்விதம் செய்யலாம். ஒரு உறுப்பினர் எதிர்த்தால் கூட தேசீய கொடியை ஏற்றுவதில் வற்புறுத்தக்கூடாது. ஒருவர் எதிர்ப்புக்கும் இணங்கி நடந்தால் அது பெரும்பான்மையோரின் பெருந்தன்மையையும் தீர்க்கதரிசனத்தையும் காட்டும். இப்பிரச்னையில் அகிம்சாவுணர்ச்சியுடன் நடக்க இதுவே வழி. கொடி ஏற்கனவே பறக்குமிடங்களுக்கும் எனது யோசனை பொருத்தமானதே. சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு மேல்மக்கள் ஒத்துழையாமை செய்கையில் பல இடங்களில் இக்கொடி பறந்து கொண்டிருந்தது. காலம் மாறிவிட்டது. இப்பொழுது எதிர்ப்பு வகுப்பு துவேஷத்தை உண்டு பண்ணியிருக்கிறது. இக்கொடியின் பேரிலும் ஒற்றுமையையும் நன்மதிப்பவர்கள் இரண்டொருவரின் எதிர்ப்புக்கும் விட்டே கொடுக்க வேண்டும்.

நான் தேசீய கொடி சம்பந்தமாக கூறியதையே வந்தேமாதர கீதம் சம்பந்தமாகவும் அனுசரிக்க வேண்டும். அது வங்க ஹிந்து முஸ்லிம்களுக்குப் போர் முரசாகவிருந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு கோஷமாகவுமிருந்தது. அது ஒரு ஹிந்து கீதம் என்று எனக்கு எப்பொழுதும் புலப்பட்டதே இல்லை. முன்பு தங்கமாகவிருந்தது இன்று இரும்பாகிவிட்டது. இவ்வித காலத்தில் அதனை இரும்பாவே விற்பது புத்திசாலித்தனம். அக் கீதம் பற்றி சச்சரவு வேண்டாம். அது கோடிக்கணக்கான மக்களின் இருதயத்திலிருந்து அழியாது. தேசீய கீதமும் வந்தேமாதர கீதமும் இத்தேசமுள்ளளவும் அழியாது.''

தினமணி (01-07-1939)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com