1925 ல் ‘மகாத்மா’  முதன்முறையாக சென்னைக்கு விஜயம் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு...

தமிழகத்தில் மதுரைப் பகுதிக்கு சுற்றுப் பிரயாணம் மேற்கொள்கையில் அங்கு கோவணத்துடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவரைக் கண்டு, இங்கு விவசாயிகள்
1925 ல் ‘மகாத்மா’  முதன்முறையாக சென்னைக்கு விஜயம் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு...

மகாத்மாவை இன்றைய தலைமுறையினருக்கு அரையாடை மனிதராகத்தான் அடையாளம் தெரியும். அவர்களுக்கு காந்தி என்றாலே ரூபாய் நோட்டுகளில் சிரிக்கும் உருவம் மட்டுமே. அது மகாத்மாவின் வயோதிக ரூபம். மகாத்மா இளமையில் குஜராத்திகளுக்கான முழு உடையுடனும் தலைப்பாகையுடனும் காட்சியளிப்பது வழக்கம். பாரிஸ்டர்  பட்டம் பெற்று பின் தென்னாப்பிரிக்காவில் பணிபுரிந்த போது ஆங்கில உடையலங்காரமான கோட் சூட் அணிந்தார். மகாத்மா, நாம் இன்று காணக்கூடிய அரையாடை கோலத்துக்கு மாறியது  அவரது தமிழக வருகையின் பின் தான்.

தமிழகத்தில் மதுரைப் பகுதிக்கு சுற்றுப் பிரயாணம் மேற்கொள்கையில் அங்கு கோவணத்துடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவரைக் கண்டு, இங்கு விவசாயிகள் உடுத்த உடையின்றி வறுமையில் வாடிக் கொண்டிருக்கையில் எனக்கு எதற்கு கோட்டும், தலைப்பாகையும், நீண்ட வேஷ்டியும் என்று ஆற்றாமையுடன் அவற்றைக் கழற்றி விட்டு இடையில் ஒரு துண்டும், உடலுக்கு ஒரு மேல் துண்டுமாகத் தமது ஆடை அணியும் விதத்தை மாற்றிக் கொண்டார் அண்ணல் காந்தி. அன்று முதல் அவரை எவரொருவரும் அரையாடை மனிதராகவே காண வாய்த்தது. இந்தியாவில் பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டங்களானாலும் சரி லண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதானாலும் சரி காந்திஜி அணிவது இந்த அரையாடையை மட்டுமே. மனிதர்கள் அவர்களது இயல்புகளுக்காக மதிக்கப்பட வேண்டுமே தவிர அவர்கள் அணியும் உடைகளுக்காக அல்ல என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தார் காந்தி.

இந்தப் புகைப்படம் காந்திஜி மதுரை செல்வதற்கு முன் எடுத்தது...

அன்னை கஸ்தூரிபா காந்தியுடன் அண்ணல் காந்தி...

சென்னை சென்ட்ரலில் காந்தியின் உரையக் கேட்கத் திரண்ட கூட்டம்...

காந்திஜி தாம் கொண்ட கொள்கையில் மிகுந்த வைராக்யம் கொண்டவராக இருந்தார். அதன் காரணமாகவே அவரது தலைமையின் கீழ் எவ்வித ஈகோ மோதல்களும் இன்றி சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் அக்காலத்தில் ஒரு குடையின்கீழ் திரண்டனர்.  காந்தி எனும் இந்த ஒற்றை முகம் இல்லையேல் இந்தியர்கள் நாம் இந்து முஸ்லீம் பாகுபாடுகளைக் களைந்து, மாநில வேற்றுமைகளைக் களைந்து சுய மதிப்பீடுகளைக் கடந்து  இந்திய விடுதலையே பிரதானம் என்ற ஒற்றைக் கொள்கையில் மையம் கொண்டிருக்க முடியுமா என்பது சந்தேகத்திற்கிடமானது. அதனால் மட்டுமே அவர் தேசப்பிதாவானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com