1947 ஆகஸ்டு 18 ல் காந்தி மகான் பெருமையைப் போற்றும் விதத்தில் தினமணியில் வெளிவந்த சுதந்திர தினவிழாச் செய்தி!

காந்தியை ஆசிய நாடுகள் அனைத்தும் தங்களது தலைவராகக் கொண்டாடி மகிழ்ந்தன.
1947 ஆகஸ்டு 18 ல் காந்தி மகான் பெருமையைப் போற்றும் விதத்தில் தினமணியில் வெளிவந்த சுதந்திர தினவிழாச் செய்தி!

இந்தியா ஆகஸ்டு 15 1947 ஆம் ஆண்டில் விடுதலை அடைந்தது. இந்திய விடுதலையை முன்னிட்டு தினமணியில் 18.8.1947 அன்று வெளிவந்த சுதந்திர தினக் கொண்டாட்ட செய்திகளைப் பாருங்கள். அன்று காந்தியை ஆசிய நாடுகள் அனைத்தும் தங்களது தலைவராகக் கொண்டாடி மகிழ்ந்தன.

இந்தியா விடுதலை அடைந்ததை ஒட்டி இந்தியர்களான நம் முன் நாம் விரைந்து செய்து முடிப்பதற்கான மாபெரும் கடமைகள் பல காத்திருக்கின்றன. நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரப் போராட்டத்துக்கு அளித்த அதே ஒத்துழைப்பை நாட்டு முன்னேற்றப்பணிகளுக்கும் அளித்து நம்பிக்கையுடன் உழைக்க உறுதியேற்போம். என அன்றைய முதல் இந்திய சுகாதார மந்திரியான அமிர்த கெளர் பிரசங்கம் செய்தார். அதற்கான ஆவணப் பதிவும் அன்றைய தினம் தினமணியில் வெளியாகியுள்ளது. இந்திய விடுதலை உலகம் முழுதும் இந்தியர்களால் கொண்டாடப்பட்டது. 

அமெரிக்காவில் உள்ள இந்திய ஸ்தானிகராலயத்தில் இந்திய சுதந்திர தினவிழாக் கொண்டாட்டம் ஆஸில் அலி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அந்த விழாவில் அமெரிக்கத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். 

இந்தியா காந்திஜியின் வழிகாட்டுதலின் படி சத்யாகிரஹப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்து ஈட்டிய இந்த விடுதலையானது உலகின் தன்மையையே மாற்றி விடக்கூடியதோர் சம்பவம் என அன்றைய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஹென்றி வாலஸ் தெரிவித்த கருத்து மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. இந்தியா சாத்வீகமான முறையில் ஈட்டிய இந்த சுதந்திரம் எவ்வளவு அர்த்த புஷ்டியானது என்று உணர இன்னும் பல தலைமுறைகளாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com