எங்கே நான் எழுதிய துண்டுக் கடுதாசி!

நாகபுரி ரயில்வே ஸ்டேஷனில் மகாத்மாவை ஒரு நிருபர் பேட்டி கண்டு அனுப்பிய செய்தி தினமணியில் பிரசுரமாகி யிருக்கிறது.
எங்கே நான் எழுதிய துண்டுக் கடுதாசி!

நாகபுரி ரயில்வே ஸ்டேஷனில் மகாத்மாவை ஒரு நிருபர் பேட்டி கண்டு அனுப்பிய செய்தி தினமணியில் பிரசுரமாகி யிருக்கிறது.
அந்தச் செய்தியில் பின்வருமாறு இருந்தது:
காங்கிரஸ்காரர் பதவிகளை ஏற்றுக்கொள்ளாதிருந்து மைனாரிட்டி மந்திரிசபைகள் ஏற்பட்டால் அந்த மந்திரிசபைகள் ஏதேனும் சில நல்ல காரியங்களைச் செய்து வோட்டர்களை வசியம் செய்து விடுமென்று நினைக்கிறீர்களா? என்று காந்திஜியை நிருபர் கேட்டாராம். அப்படி நடந்தால் நான் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று காந்திஜி சொன்னாராம்.
அந்த பேட்டி பற்றி காந்திஜி இப்போது பின் வருமாறு தெரிவிக்கிறார்.
நான் என்ன நினைத்தேனோ அதற்கு நேர் விரோதமாகவே இந்தத் தந்தியை அனுப்பியவர் தெரிவிக்கிறார். மைனாரிட்டி மந்திரிகள் நல்ல காரியங்கள் சில செய்து வோட்டர்களை வசியம் செய்வார்களானால் நான் ஆச்சரியப்படுவேன் என்றுதான் நான் கூற நினைத்தேன். கேள்விகளடங்கிய ஓர் கடுதாசி ரயில்வே கம்ப்பார்ட்மென்டில் என்னிடம் தரப்பட்டது. என்னைச் சுற்றி நல்ல கூட்டம். பென்ஸிலால் அவசரம் அவசரமாக பதில்களை எழுதி நிருபரிடம் தந்தேன். ஆச்சரியப்படுவதற்கில்லை என்றுதான் காந்திஜி எழுதினா ரென்று அந்த நிருபர் சொல்வாரானால் நான் எழுதிய அந்தத் துண்டுக் கடுதாசியைப் பார்க்க விரும்புகிறேன் என்று காந்திஜி கூறுகிறார்.
இந்த நிருபரின் தந்தி எல்லாப் பத்திரிகாலயங்களுக்கும் வந்தது போல தினமணிக்கும் கிடைத்தது. எந்த விஷயத்தை மகாத்மா ஆட்சேபிக்கிறாரோ, அதைப் பார்த்ததும், இவ்வாறு மகாத்மா சொல்லியிருக்க மாட்டாரென்று நாம் நினைத்து அந்தப் பகுதியை எட்டுவிட்டுப் பிரசுரித்தோம். இப்போது நாம் நினைத்ததே சரியென்று தெரிகிறது.

தினமணி (27-04-1937)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com