ஜவாஹர்-காந்திஜி சம்பாஷணை 

தேசத்தின் ராஜீய நெருக்கடி பற்றியும், பதவிப் பிரச்னை பற்றியும் பண்டித ஜவாஹர்லால் நேரு மகாத்மா காந்தியோடு இதுவரை 20 மணி நேரங்கள் ஆலோசித்திருக்கிறார்.
ஜவாஹர்-காந்திஜி சம்பாஷணை 

தேசத்தின் ராஜீய நெருக்கடி பற்றியும், பதவிப் பிரச்னை பற்றியும் பண்டித ஜவாஹர்லால் நேரு மகாத்மா காந்தியோடு இதுவரை 20 மணி நேரங்கள் ஆலோசித்திருக்கிறார். என்ன பேச்சு நடந்ததென்பது பரம ரகஸ்யமாக யிருக்கிறது. பேச்சு திருப்திகரமாக நடந்திருக்கிறதென்பது மட்டும் தெரிகிறது.
பிரச்னைகளின் எல்லா ஓரங்களையும் நன்றாக அலசிப் பேசியிருக்கிறார்களென்றும், பண்டித நேரு இந்த சம்பாஷணைக்கு வெகு தயாராகச் சென்றிருக்கிறார் என்பதும் தெரிகிறது. காங்கிரஸ் தீர்மானங்களின் நகல்கள், நெருக்கடி ஏற்பட்டது முதல் மகாத்மா விடுத்துள்ள அறிக்கைகளின் நகல்கள், இந்தப் பிரச்னை அதிகார வர்க்கத்திடமிருந்து முளைத்த அறிக்கைகள் இத்தனையும் நேருஜி எடுத்துச் சென்றிருந்தாராம்.
இந்த தஸ்தாவேஜுகள் மட்டுமின்றி, மாகாணங்களின் அபிப்ராயங்களும் இரு தலைவர்களால் நன்கு கவனிக்கப்பட்டதாம். 
ஞாயிறன்று காலை ஒரு மாட்டு வண்டியிலேறிக் கொண்டு வார்தாவினின்று சிவகிராமத்திற்கு நேருஜி சென்றார். மாலை 5 மணி வரைக்கும் மகாத்மாவோடு பேசிக்கொண்டிருந்தார். இன்னும் பேச வேண்டியது தீரவில்லையாம்.
நாளை இரவு மகாத்மா காந்தி தமது மெளன விரதத்தை முடித்து விடுகிறார். அதற்குப் பின்னரும், செவ்வாய்க்கிழமை யன்று காலையும் நேருஜி பாக்கி விஷயங்களையும் பேசி விடுவாரென்று தெரிகிறது.
இந்த மூன்று நாளாக நேருஜியும் காந்திஜியும் சம்பாஷித்ததில் இருவருக்கும் அபிப்ராயங்கள் பூராவும் விளங்கி பரஸ்பரம் முடிவுக்கு வந்து விட்டதாகவும் காரியக் கமிட்டியில் சீக்கிரத்தில் பதவிப் பிரச்னை பற்றி முடிவு கூறப்பட்டு விடுமென்று சொல்லப்படுகிறது. 
மகாத்மாவிடம் நேருஜி பேசிவிட்டுத் திரும்பியவுடன் சர்தார் பட்டேலும், சங்கர்ராவ் தேவும், புலாபாய் தேசாயும், அபுல்கலாம் ஆஸாதும் வந்து சேர்ந்தனர். அவர்களும் சம்பாஷிக்க ஆரம்
பித்தனர்.

தினமணி (08-06-1937)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com