இதனால்தான் அந்த காலத்தில் செப்பு குவளையில் நீர் குடித்தார்களா?

“அந்த காலத்தில் நாங்கலாம் செப்பு பாத்திரத்தில்தான் தண்ணீர் குடிப்போம்” என்று நம் தாத்தா பாட்டிகள் சொல்வதை நம்மில் பலர் கேட்டிருப்போம். இன்றும் சில வீடுகளில் செம்பாலான குவளைகளை உபயோகிக்கிறாரார்கள்.
இதனால்தான் அந்த காலத்தில் செப்பு குவளையில் நீர் குடித்தார்களா?

“அந்த காலத்தில் நாங்கலாம் செப்பு பாத்திரத்தில்தான் தண்ணீர் குடிப்போம்” என்று நம் தாத்தா பாட்டிகள் சொல்வதை நம்மில் பெரும்பாலானோர் கேட்டிருப்போம். இன்றும் கூட சில வீடுகளில் செம்பாலான குவளைகள் மற்றும் ஜாடிகளையே தண்ணீர் குடிக்கப் பயன்படுத்துகிறார்கள். அப்படி, இந்தச் செப்பு பாத்திரங்களில் மறைந்திருக்கும் அறிவியல்தான் என்ன?

இதைப்பற்றி விவரமாகப் பார்ப்பதற்கு முன்பு ஆயுர்வேதம் இந்தச் செம்பு உலோகத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்: ‘செம்பானது நமது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் மற்றும் பூமி ஆகிய ஐம்பூத தோஷங்களையும் தீர்க்கவல்லது’ என்று கூறுகிறது. செம்பில் சேமித்து வைத்த நீரை ‘தாமிர ஜல’ என்று அழைப்பார்கள், குறைந்தது எட்டு மணி நேரமாவது நீரை இதில் செமித்து வைப்பதே அனைத்து விதமானக் கெடுதல்களையும் நீக்கி சுத்தமான மற்றும் ஆரோக்கியமான நீரை நமக்குத் தரக்கூடும்.

செப்பில் சேமித்து வைத்த நீரைப் பருகுவதால் வரும் நன்மைகள் என்னென்ன என்று தெரியுமா?

1. செரிமான அமைப்பைச் சீர் செய்யும்:

அமிலத் தன்மை அதிகமுள்ள உணவுகள் அல்லது வாயுவை அதிகரிக்கக் கூடிய உணவுகளை உண்டு அசீரணத்தால் அவதிப் படுபவர்களை செம்பு பாத்திரங்களில் குடிக்கும் நீர் காப்பாற்றும். கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொன்று அசீரணம் மற்றும் நோய் தொற்றுக்கான மிகப்பெரிய தீர்வாய் இது அமையும். மேலும் உங்கள் வயிற்றில் ஏற்படும் வீக்கம், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து உண்ணும் உணவிலிருந்து முழுமையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் செய்கிறது.

2. உடல் கொழுப்பை கறைக்கும்:

தினசரி காலையில் செப்புக் குடத்தில் சேமித்து வைத்த நீரை ஒரு முழு குவளை அளவு குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து கணிசமான அளவு உடல் எடையைக் குறைக்க இது உதவும்.

3. இளமையான தோற்றத்தை தரும்:

வயது காரணமாக முகத்தில் ஏற்படும் கோடுகள், தோல் சுருக்கங்கள், கருவளையங்கள் மற்றும் வறண்டச் சருமத்தை தடுத்து, நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றத்தை தரக்கூடியது. நிச்சயம் 5 முதல் 10 வயது குறைந்த தோற்றத்தை உங்களால் செம்பில் சேமித்த நீரைக் குடிப்பதால் பெற முடியும். இளமை மட்டுமில்லாமல் ஆரோக்கியமான சருமத்தையும் தரவல்லது.

4. உயர் ரத்த அழுத்தத்தைத் தடுக்கும்:

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் ட்ரைகிலிசரைட் அளவுகளைச் சீர் செய்யும் திறன் இந்தச் செம்பு நீருக்கு உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ரத்த குழாய்களை சுத்திகரித்து ரத்த ஓட்டத்தையும் சரி செய்கிறது. 

5. வாதம் மற்றும் மூட்டு அழற்சிகளைச் சீர் செய்யும்:

அழற்சி, முடக்கு வாதம், மூட்டுவலி ஆகியவற்றால் ஏற்படக்கூடிய வீக்கங்களைக் குறைக்கும் ஒரு சிறந்த எதிர்ப்பு சக்தி பண்பினை செம்பு பெற்றுள்ளது. இதனால் ஏற்படும் வலிகளில் இருந்தும் முழுமையான நிவாரணத்தையும் இது வழங்கவல்லது.

6. தோல் ஆரோக்கியம் மற்றும் மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும்:

நமது தோலின் நிறத்திற்குக் காரணமாக இருக்கும் மெலனின் உற்பத்தியை இது அதிகரிக்கும். மெலனின் சூரிய ஒளியிலிருந்து நமது சருமத்தை பாதுகாக்க உதவுவதோடு, காயங்களை வேகமாகக் குணப்படுத்தி, வடுக்களையும் மூடுகிறது. அதிகாலையில் இந்த நீரைப் பருகுவது மாசு மருவற்ற சருமத்தை பெறவும் வழி செய்யும்.

நல்ல செப்பு பாத்திரத்தை எப்படித் தேர்வு செய்வது?

தூய செப்பாலான பாத்திரத்தை வாங்குவதென்பது மிகவும் முக்கியமான ஒன்று. வேறு உலோகங்கள் கலந்த பாத்திரத்தால் நாம் மேலே கண்ட நன்மைகளை வழங்க இயலாது. 

தூய்மையான செம்பா அல்லது கலப்படமானதா என்பதைக் கண்டறிய மிக எளிமையான வழி, செப்பு மிகவும் கடினமான உலோகம் அதனால் அதில் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளைச் செய்ய முடியாது. நீங்கள் வாங்கும் செப்புப் பாத்திரம் அதிகமான வேளைப்பாடுகளைக் கொண்டிருந்தால் அது கலப்படமான செம்பாக இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com