மந்தமாகவும், பலவீனமாகவும் இருக்கும் உங்கள் குழந்தைக்கும் இந்த குறைபாடு இருக்கலாம்!

உங்கள் குழந்தை பெரும்பாலும் மந்தமாகவும், பலவீனமாகவும் மற்றும் எரிச்சலுடனே காணப்படுகிறார்களா? அப்படியென்றால் அவர்களுக்கு நுண் ஊட்டச்சத்து குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது
மந்தமாகவும், பலவீனமாகவும் இருக்கும் உங்கள் குழந்தைக்கும் இந்த குறைபாடு இருக்கலாம்!

உங்கள் குழந்தை பெரும்பாலும் மந்தமாகவும், பலவீனமாகவும் மற்றும் எரிச்சலுடனே காணப்படுகிறார்களா? அப்படியென்றால் அவர்களுக்கு நுண் ஊட்டச்சத்து குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. 

நுண் ஊட்டச்சத்து குறைபாடு என்றால் என்ன?

நுண் ஊட்டச்சத்து குறைபாடென்பது முறையான மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் சிறிய அளவிலான அத்தியாவசிய வைட்டமின் மற்றும் தாதுகளின் பற்றாக்குறை ஆகும்.

யூனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் மூன்றில் ஒரு குழந்தை நுண் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்க படுகிறார்கள். அதாவது அயோடின், வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, துத்தநாகம் மற்றும் இரும்புச் சத்து ஆகிய நுண்ணிய ஊட்டச்சத்துகளைக் குழந்தைகள் உட்கொள்வதில்லை. இதனால் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் அறிவாற்றல் செயல்பாடு பலவீனமடைவதுடன் இரத்த சோகை போன்ற ஆபத்துகளையும் விளைவிக்கிறது. 

குழந்தைகள் நல மருத்துவரும் ஆலோசகருமான மருத்துவர் ஸ்ரீதர் கூறுகையில், நுண் ஊட்டச்சத்துகளே உடலின் கட்டுமானத் தொகுதிகள் என்று வலியுறுத்துகிறார். “பெரும்பாலான இந்திய குடும்பங்கள் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளை வழங்கினாலும், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு முக்கியமான நுண் ஊட்டச்சத்துகளை தருவதில்லை, இதைப் போன்ற ஊட்டச்சத்து குறைபாட்டால் அவர்கள் வாழ்க்கையின் பிற்பகுதியால் அதிகம் பாதிக்கப்படுவர்” என்றார். 

ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் ஆண்டுதோறும் ஐந்து வயதிற்கும் குறைந்த 20 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பதைத் தடுக்கலாம்

மூன்று வயதான சனத்தின் தாயான லக்‌ஷ்மி சுவாமிநாதன் அவர்களுக்கு தன் மகன் மற்ற குழந்தைகளைப் போல் சுறுசுறுப்பாக செயல்படவில்லை என்ற வருத்தத்துடன் குழந்தைகள் நல மருத்துவரைச் சந்தித்த பொழுதுதான் சனத்திற்கு ஊட்டச்சத்து பற்றாக்குறையும், நுண் ஊட்டச்சத்து குறைபாடும் இருப்பது தெரிய வந்தது. “ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுத்த பிறகு அவனைத் திட உணவைச் சாப்பிட வைக்க மிகவும் கஷ்டமாக இருக்கும்” என்றார் லக்‌ஷ்மி. பின்னர் சனத்திற்கு வைட்டமின் ஏ குறைபாடிருப்பது கண்டறியப்பட்டது. வைட்டமின் ஏ நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தத் தேவைப்படுகிறது. 

மற்றொரு யுனிசெஃப் அறிக்கையில் வைட்டமின் ஏ குறைபாடுடைய குழந்தைகள் தட்டம்மை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்களால் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நாங்கள் சனத்திற்கு வலுவூட்டக்கூடிய ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளை அளித்த பிறகு அவனுடைய பற்றாக்குறையை தலைகீழாக மாற்ற முடிந்தது” என்றும் கூறியுள்ளார்.

“பெரும்பாலான குழந்தைகள் சாப்பிடும் ‘ஜங்க்’ உணவு வகைகளால் அவர்களது பசி அடங்கினாலும், உடலுக்குத் தேவையான எந்தவொரு ஊட்டச்சத்தும் அதிலிருந்து கிடைப்பதில்லை”

குழந்தை பிறந்தது முதல் 1000 நாட்களுக்குள் கிடைக்கும் ஊட்டச்சத்தானது ஒரு பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தக் கூடியதாக அமையும், மேலும் வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதோடு வலிமையான மனம் மற்றும் உடல் வளர்ச்சியை உறுதி செய்யும். 

ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாட்டையும் எதிர்க்கவல்லது

ஆறு மாதங்களுக்குப் பிறகு ராகி, நாகாகனியா கலவை மற்றும் வலுவூட்டப்பட்ட தானிய உணவுகளைக் குழந்தைகளுக்கு வழங்குவது 
அவர்கள் நுண் ஊட்டச்சத்து பெற அவசியமானதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com