சர்க்கரை நோயை வெல்ல...

வயது வேறுபாடு இன்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சர்க்கரை நோய் பாதிக்கும். உலகமெங்கும் பரவலாக இந்த நோய் காணப்படுகிறது. இந்த நோயினால் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
சர்க்கரை நோயை வெல்ல...


வயது வேறுபாடு இன்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சர்க்கரை நோய் பாதிக்கும். உலகமெங்கும் பரவலாக இந்த நோய் காணப்படுகிறது. இந்த நோயினால் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் முறை:

சிறுவர்களை தாக்குகிற இந்த நோய்க்கு "ஜுவனைல் டயபடிஸ்' என்று பெயர். இந்த நோய் பாதித்தவர்களுக்கு இன்சுலின் சுரக்காது. இன்சுலின் சுரக்கும் உயிர் அணுக்கள் செயலிழந்து விடுகின்றன. இவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி மருந்தையே நம்பியே இருக்க வேண்டியுள்ளது.  இந்த நோயுடன் மற்றவர்களைப் போல் வாழ முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். இப்போதைய மருத்துவ வளர்ச்சியில் இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியவில்லை என்றாலும் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் இனிமையாக வாழலாம். 

அறிகுறிகள்:

  1. சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வரும்.  
  2. அதிகமாக  தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது.
  3. அதிகமாகப் பசிப்பதுடன்,  அடிக்கடி சோர்வு ஏற்படும்.
  4. உடல் எடை திடீரென மிக வேகமாகக் குறையும்.
  5. இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள்: 


இந்த நோயைக் கர்ப்பத்தின்போது மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சிறு வயது முதல் இந்த நோய் தொடர்ந்து இருந்து அதனுடன் திருமண வாழ்க்கை, கர்ப்பம் தரித்தல் என்பது ஒரு வகை.  இந்த வகையில் இந்த நோய் ஆரம்பித்த நாள் முதல் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியம். அதோடு பிரசவிக்கும் வரை அடிக்கடி ரத்தப் பரிசோதனை செய்து மிகவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.  ரத்தப் பரிசோதனையில் சர்க்கரையின் அளவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 120 மில்லி கிராமுக்குக் குறைவாக இருத்தல் வேண்டும். ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை, கருக் குழந்தைக்கும் பிரச்னையை ஏற்படுத்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com