எல்லோரும் பாட்டுப் பாடுங்கள், ஒன்றாக சேர்ந்து ஆடுங்கள்! அமெரிக்க ஆய்வு முடிவு!

எல்லோரும் பாட்டுப் பாடுங்கள், ஒன்றாக சேர்ந்து ஆடுங்கள்! அமெரிக்க ஆய்வு முடிவு!

பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களிலிருந்து ப்ரீ ஸ்கூலில் கல்வி கற்க வரும் குழந்தைகள் ஏதோ ஒரு வகையில் மன அழுத்தத்துடன் தான் இருப்பார்கள். வகுப்புக்களில் நடத்தப்படும் ஆடல், பாடல், கேளிக்கை சார்ந்த கலை நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்கையில் அவர்களது மன அழுத்தம் குறைகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு.

இதற்கு முன் செய்யப்பட்ட ஓர் ஆய்வில் குடும்பங்களில் பொருளாதார பிரச்னை நிலவினால் அது குழந்தைகளின் படிப்பையும் நடத்தையையும் பாதிக்கிறது என்று கண்டறிந்தனர். அது மட்டும் இல்லாமல் மறைமுகமாக அவர்கள் உடல் மற்றும் மன நலமும் கேள்விக்கு உள்ளாகிறது என்கிறது அந்த ஆய்வு முடிவு.

இதனை தொடர்ந்து, பெனிசில்வேனியாவில் உள்ள வெஸ்ட் செஸ்டர் பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சியாளர் எலினார் பிரவுன் புதிய ஆய்வொன்றை மேற்கொண்டார். அதில் இசை, நடனம் போன்ற கலைத்தன்மை மிகுந்தவகுப்புகளில் உற்சாகத்துடன் பங்கேற்கும் குழந்தைகள் தங்களுடைய வீட்டுப் பிரச்னைகளை தற்காலிகமாக மறக்கிறார்கள். இது அவர்களின் மன அழுத்தத்தையும் குறைக்கிறது என்கிறார் . 

மேலும் இந்த ஆய்வுக்காக அவர் மூன்று வயதிலிருந்து ஐந்து வயதுக்குட்பட்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சார்ந்த 310 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்தார். அவர்களின் எச்சிலை (சலைவா) சாம்பிள் எடுத்து கார்டிசோல் எனும் பரிசோதனைக்கு அனுப்பினார். ஆச்சரியப்படத்தக்க முடிவைப் பார்த்தார். பரிசோதனையில் பங்கெடுத்த குழந்தைகளின் கார்டிசோல் அளவு குறைந்த அளவில் இருந்தது. கார்டிசோல் அதிகளவு இருந்திருந்தால் அவர்கள் மன அழுத்தத்தில் உள்ளார்கள் என்பதாகும்.

இந்த சோதனை வருடத்தின் ஆரம்பத்தில் செய்யப்படவில்லை. வகுப்புகள் ஆரம்பித்து வெகு நாட்களுக்குப் பிறகு வருடத்தின் நடுவில் அல்லது வருடக் கடைசியில். இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இத்தகைய வகுப்புகளில் பங்கேற்பதன் மூலம் மட்டுமே கவனிக்கத்தக்க மாற்றம் ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. அதை அந்த குழந்தைகள் எப்படி உள்வாங்கி வெளிப்படுத்துகிறார்கள் என்பதிலும் இருக்கிறது. சிறிய குழந்தைகள் என்பதால் அவர்கள் மனது எளிதில் நடனம் அல்லது இசையில் ஆழ்ந்து ஈடுபட்டு, மற்ற கவலைகளை காலப்போக்கில் மறக்கிறார்கள். இது அவர்கள் உளவியலை மேம்படுத்துகிறது. 

இறுதியாக, இந்த ஆய்வின் மைய கண்டுபிடிப்பு என்னவெனில், இசை, நடனம் போன்றவற்றில் ஆழ்ந்து ஈடுபட்டால் அது கார்டிசோல் அளவை குறைக்கும் என்பதாகும். இதன் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களிலிருந்து கல்வி கற்ற வரும் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்’ என்று பிரவுன், 'சைல்ட் டெவலப்மென்ட்’ என்ற பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com