பெண் குழந்தைகளை புறக்கணிக்காதீர்கள்! நடிகர் இம்ரான் ஆவேசம்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள மறுக்கும்
பெண் குழந்தைகளை புறக்கணிக்காதீர்கள்! நடிகர் இம்ரான் ஆவேசம்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள மறுக்கும் தந்தைகளை சாடுகிறார் நடிகர் இம்ரான் கான்.

தனக்கும் ஒரு சிறிய மகள் இருக்கிறாள். பெண் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படும்போது அவர்களுக்குரிய தொடர் சிகிச்சையை செய்யாமல் சில பெற்றோர்கள் அக்குழந்தைகளை கைவிட்டுவிடுகிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் பொருளாதார பிரச்னை மட்டுமில்லை, பெண் குழந்தை தானே அவர்களுக்கு ஏதற்கு அதிகளவு பணத்தை செலவு செய்யவேண்டும் என்ற அலட்சிய மனப்பான்மையும் தான் இதற்கு காரணம். இது என் மனத்தை மிகவும் கலங்கச் செய்கிறது என்றார் இம்ரான்.

ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை தர வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அதை மறுப்பது மனிதத்தன்மையற்ற செயலாகும். கடந்த நான்கு வருடங்களாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அமைப்புக்களில் பங்கேற்று தான் அதில் ஈடுபட்டாலும், இந்த வருடம் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளின் சிகிச்சைக்காகவும் ஹெல்ப் லைன் எனும் அமைப்புடன் சேர்ந்து பாடுபடப்போவதாகக் கூறினார் இம்ரான். அதன் தொடக்கமாக பெற்றோர்களாலேயே கைவிடப்பட்ட பெண் குழந்தைகளின் சிகிச்சைக்காக களத்தில் இறங்கி 21 லட்ச ரூபாய் வரை நிதி திரட்டியிருக்கிறார். இந்தப் பணத்தில் பெண் குழந்தைகளுக்கான சிகிச்சை, தங்கும் வசதி, மற்றும் உணவு போன்றவற்றுக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளது ஹெல்ப் லைன் அமைப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com