ஆண்களுக்கும் வரலாம் எலும்பு நலிவு நோய்

இன்று (20.10.2016) உலக ஆஸ்டியோபொராசிஸ் தினம்.
ஆண்களுக்கும் வரலாம் எலும்பு நலிவு நோய்

இன்று (20.10.2016) உலக ஆஸ்டியோபொராசிஸ் தினம். பெரும்பாலும் பெண்களுக்கு வரும் நோய் என்று கருதப்பட்ட ஆஸ்டியோபொராசிஸ் ஆண்களுக்கும் பாதிப்பை தருகிறது. ஹார்மோன் மாற்றங்கள், குறைந்த அளவு டெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பு, தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் வாழ்க்கை முறை, அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம், புகைக்கும் பழக்கம் அல்லது புகையிலை உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால்தான் ஆண்களுக்கு ஆஸ்டியோபொராசிஸ் வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். சர்வதேச ஆஸ்டியோபொராசிஸ் அமைப்பின் கணக்கின் படி 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் சராசரியாக ஐந்தில் ஒருவர் இந்நோய்க்கு ஆளாகின்றனர்.

ஆஸ்டியோபொராசிஸ் ஏற்பட்டால் எலும்புகள் பலவீனமாகி உடைந்து விடக் கூடிய அளவிற்கு ஆகிவிடும். பெண்களின் எலும்புகள் ஆண்களை விட வலிமை குறைந்தது. ஆஸ்டியோபொராசிஸ் ஏற்பட்டால் எலும்புகள் மேலும் மென்மையாகி உடைந்துவிடும் நிலைக்கு வந்துவிடும். மெனோபாஸ் வயதை எட்டும் பெண்களுக்கு இந்நோய் வர அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்கிறார்கள் மருத்துவர்கள். இச்சமயத்தில் பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணியான ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பு குறைவிடும். 45 வயதுக்கு மேலுள்ள பெண்களும் 70 வயது நெருங்கும் ஆண்களும் நிச்சயம் இந்நோய் வருவதற்கு முன்னரே தற்காப்பு முயற்சிகளை ஆரம்பித்துவிட வேண்டும். காரணம் இது வந்துவிட்டால் நடப்பது பாதிப்படைந்துவிடும், தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு ஏற்பட்டு மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

பெண்களை மட்டுமே அதிகம் தாக்கும் என்று சொல்லப்பட்ட இந்நோய் ஆண்களையும் விட்டு வைக்கவில்லை, வைட்டமின் டி குறைபாடு, கால்ஷியம் சத்து போதாமை மற்றும் டெஸ்ஸ்டிரோன் குறைந்த அளவு மற்றும் மேற்சொன்ன காரணங்கள் ஆகியவை ஆண்களின் ஆஸ்டிபொராசிஸின் முக்கிய காரணங்கள் என்கிறார் ஸ்போர்ட்ஸ்  ரானா கே.செங்கப்பா. இவர் ஆக்டிவ் ஆர்த்தோ எனும் விளையாட்டு மருத்துவ நிறுவனத்தின் மருத்துவ இயக்குநர் ஆவார். இந்நோய்க்குரிய இன்னொரு பிரச்னை என்னவெனில் அது ஆரம்பத்தில் வெளியே தெரியாது. போன் மினரல் டென்சிட்டி (Bone Mineral Density) என்ற பரிசோதனையை செய்து பார்த்து தான் தெரிந்து கொள்ள முடியும்.

சமீபத்திய ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் ஆராய்ச்சி ஒன்றில் போன் டென்சிட்டி குறைவதற்கான காரணம் ஆண்களின் அதிக எடை, பெரிய தொப்பை என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதிகப்படியான கொழுப்பினால் இதய நோய்கள், நீரிழிவுப் பிரச்னைகளுடன் சேர்த்து எலும்பு நோய்களும் ஏற்படும் என்கிறார் வட அமெரிக்க ஆராய்ச்சியாளர் மிரியம் பிரிடெல்லா.

ஆஸ்டியோபொராஸிஸ் தவிர்க்க  சில வழிமுறைகள் :

யோகா, நடனம், ஏரோபிக்ஸ் என உடல் உழைப்பைக் கோரும் ஏதாவது ஒன்றினை தொடர்ந்து செய்ய வேண்டும்.

எடை தாங்கும் பயிற்சிகள் செய்ய வேண்டும். ஓடுவது, ஜாக்கிங், வாக்கிங், படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது போன்ற செயல்கள் எலும்புகளை உறுதியாக வைத்திருக்க உதவும் விஷயங்கள்.

உணவைப் பொருத்தவரையில் கொழுப்பு நீக்கப்பட்ட பால், யோகர்ட், சீஸ், பழங்கள், பச்சைக் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com