உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? சில ஜிம் பயிற்சிகள்!

ஒபிசிடி என்பது இப்போதைய இளைஞர்கள் பலரின் தலையாய பிரச்னை. உடல் உழைப்பின்மை,
உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? சில ஜிம் பயிற்சிகள்!

ஒபிசிடி என்பது இப்போதைய இளைஞர்கள் பலரின் தலையாய பிரச்னை. உடல் உழைப்பின்மை, நேரமின்மை, உணவு உறக்க பிரச்னைகள் என பல வாழ்வியல் சார்ந்த பிரச்னைகள் இதற்கு சில காரணங்களாக சொல்லப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி செய்வதைத் தவிர ஜிம்முக்கு சென்றும் பயிற்சி செய்வதால் பலன் நிச்சயம் உண்டு. உடலின் எந்தப் பகுதியைக் குறைக்க வேண்டும் அல்லது கூட்ட வேண்டும்? அதற்கு எந்த மெஷின் பொருத்தமாக இருக்கும்? இதோ சில ஜிம் பயிற்சிகள் உங்களுக்காக

ட்ரெட்மில்

ட்ரெட்மில் பயிற்சியை தினமும் செய்தால் கலோரிகளைக் குறைக்கலாம். ஒரே இடத்தில் இருந்தபடி நடக்க, ஓட உதவும் இயந்திரம் இது. நடக்கும் வேகத்தைக் குறைக்கவும் கூட்டவும் இதில் வசதி இருக்கிறது.

எப்படி இதில் பயிற்சியை செய்வது என்பதை ஜிம் ஆலோசகரிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பின் பயன்படுத்துவது நல்லது. தினமும் 15 அல்லது 20 நிமிடங்கள் பயிற்சி செய்தால் போதுமானது. ஒரே நாளில் உடலை இளைக்க வைக்க முடியாது. எனவே எந்தப் பயிற்சியையும் வரையறைக்கு மேல் செய்வது நல்லதல்ல. கால் வலி, உடல் வலி அல்லது மூட்டுவலி வரும் அபாயம் உண்டு.

வயிற்றுச்சதை குறைய ஆப் க்ரன்ச் 

அடி வயிற்றில் சேர்ந்திருக்கும் தேவையற்ற சதையைக் குறைத்து, உடலை ஸ்லிம்மாக காட்டும் இயந்திரம் இது! இரண்டு பக்கமும் இருக்கும் ஹேண்டில் பாரை கையில் இழுத்து முன்பக்கமாக குனிந்து நிமிர வேண்டும்.

அதில் உள்ள போர்டில் 1ஒன்றிலிருந்து பன்னிரண்டு வரை எண்கள் இருக்கும். 1 ஆரம்பப் படிநிலை, பொதுவாக 5 நார்மல் ஆனால் 12 மிகவும் கஷ்டம். அவரவர் உடல்வாகுக்கு ஏற்றபடி எண்களை செட் செய்து இப்பயிற்சியை செய்யலாம். க்ரன்ச் பயிற்சிகளை தினமும் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

ஸ்விஸ் பால்

ஸ்விஸ் பால் என்பது பெரிய ஒரு பந்து ஜிம்மில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் பந்தைக் கொண்டு பல பயிற்சிகள் செய்யலாம். முதுகுக்கு, கால்களுக்கு, வயிற்றுக்கு என உடல் முழுவதற்கும் தனித்தனிப் பயிற்சிகள் கற்றுத் தருவார்கள். கடினமான உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு இந்தப் பந்துப் பயிற்சிகள் எளிமையாக இருக்கும்.

முதுகு வலி நீங்க, எடை குறைய, வயிற்றுப் பகுதியை கச்சிதமாக வைக்க என இப்பயிற்சியைத் தொடர்ந்து செய்தால் அனேகப் பலன்கள் உண்டு. 20 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்கள் வரை விளையாட்டைப் போல இப்பயிற்சியை செய்யலாம்.

பைக் ரீகம்பென்ட் 

பைக் ஓட்டுவது மாதிரியான பயிற்சி இது. சைக்கிளில் பெடல் போடுவது போல கால்களை சுழற்ற வேண்டும்.

அடிவயிறு, தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைந்து சதை குறையும். தினமும் 20 நிமிடங்கள் செய்தால் கூடிய விரைவில் எடை குறையும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

மார்பகத் தளர்ச்சி நீங்க

செஸ்ட் ப்ரெஸ் எனும் இப்பயிற்சி பெண்களுக்கு ஏற்றது. அமர்ந்த நிலையில், இருபக்கமும் இருக்கும் லீவரை முன்னும் பின்னும் இழுக்கும் பயிற்சி இது.

மார்பகங்கள் தளர்ந்து போகாமல் இருக்கும். தினமும் 20 நிமிடம் செய்தால் போதும்.

ஹைப்பர் எக்ஸ்டென்ஷன் 

முதுகுத் தசைப் பகுதிகளையும், தண்டுவடத்தையும் உறுதியாக்கும் பயிற்சி இது.  முதுகு மற்றும் தண்டுவட உறுதிக்கு இயந்திரத்தின் உதவியோடு முன்புறம் குனிந்து நிமிர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.

வாகனம் ஓட்டுபவர்கள், தொடர்ந்து இருக்கையில் அமர்ந்து வேலை செய்பவர்கள் இப்பயிற்சியைத் தொடர்ந்து செய்தால் முதுகு வலி வராது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com