"புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 80 % பேரை குணப்படுத்தலாம்'

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 10 பேரில் 8 பேரை முழுவதுமாக குணப்படுத்த முடியும் என்று குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ரேவதி ராஜ் கூறினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 10 பேரில் 8 பேரை முழுவதுமாக குணப்படுத்த முடியும் என்று குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ரேவதி ராஜ் கூறினார்.

புற்றுநோய் விழிப்புணர்வுக்கான ரோஸ் தின நிகழ்ச்சி அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனையின் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அவர் பேசியது:-

குழந்தைகளைத் தாக்கும் புற்றுநோய்களில் பெரும்பாலானவற்றை குணப்படுத்தலாம். ஆரம்ப நிலையில் கண்டறியும் பட்சத்தில் 10-இல் 8 குழந்தைகளை முழுவதுமாகக் குணப்படுத்த முடியும். பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளை எளிதில் குணப்படுத்த இயலும். குழந்தைகளைப் பொருத்தவரை ரத்தப் புற்றுநோய் தான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு மருத்துவமனையில் 100 குழந்தைகளில் 40 பேருக்கு ரத்தப்புற்றுநோய் பாதிப்பு உள்ளது. ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் 80 சதவீத ரத்தப் புற்றுநோய் பாதிப்பை குணப்படுத்த இயலும். இதுதவிர, மூளை புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் ஆகியவையும் குழந்தைகளைப் பாதிக்கும் புற்றுநோய் வகைகளாகும்.
பிறவியிலேயே புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது 5 சதவீதம் பேருக்குத்தான். மீதம் உள்ள 95 சதவீத குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த பின்பு குறிப்பிட்ட செல்களில் மாற்றம் ஏற்பட்டு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.

ஆரம்ப நிலையிலேயே சரியான சிகிச்சையை மேற்கொண்டால் புற்றுநோயிலிருந்து விடுபட்டு சாதாரண வாழ்க்கையை வாழ முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com