மதுரையில் இருந்து சென்னைக்கு பறந்து வந்த இதயம்

மூளைச்சாவு ஏற்பட்டதையடுத்து தானமளிக்கப்பட்ட மாணவரின் இதயம், மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு வேறு நோயாளிக்கு பொருத்தப்பட்டது.
மதுரையில் இருந்து சென்னைக்கு பறந்து வந்த இதயம்

மூளைச்சாவு ஏற்பட்டதையடுத்து தானமளிக்கப்பட்ட மாணவரின் இதயம், மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு வேறு நோயாளிக்கு பொருத்தப்பட்டது.
புதுக்கோட்டையில் பொறியியல் பட்டயப்படிப்பு படித்து வந்த மாணவர் தமிழ்மணி (19) . இவர் வெள்ளிக்கிழமை (ஏப்.14) சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயங்களுடன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பயனளிக்காமல் செவ்வாய்க்கிழமை (ஏப்.18) அவர் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்கு உறவினர்கள் முன்வந்தனர். அதைத்தொடர்ந்து அவரது கண்கள், இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய 4 உறுப்புகள் தானம் பெறப்பட்டன.
இதில் இதயம், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, தானம் பெறப்பட்ட இதயம் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் புறப்பட்டு 11 நிமிடங்களில் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இதய செயலிழப்பால் சிகிச்சை பெற்று வந்த 23 வயது ஆணுக்கு அந்த இதயம் பொருத்தப்பட்டது. தானம் பெறப்பட்ட தமிழ்மணியின் கல்லீரலும், ஒரு சிறுநீரகமும் மதுரையில் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது. கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com