ஆயுர்வேத நாடி பரிசோதனை: இன்று தேசிய மருத்துவப் பயிலரங்கம்

நாடியைக் கொண்டு நோய்களைக் கண்டறியும் ஆயுர்வேத மருத்துவ அடிப்படையிலான 'நாடி பரிக்ஷா' தேசியப் பயிலரங்கம் சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் வெள்ளிக்கிழமை (ஏப்.28) தொடங்குகிறது.

நாடியைக் கொண்டு நோய்களைக் கண்டறியும் ஆயுர்வேத மருத்துவ அடிப்படையிலான 'நாடி பரிக்ஷா' தேசியப் பயிலரங்கம் சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் வெள்ளிக்கிழமை (ஏப்.28) தொடங்குகிறது.
நசரத்பேட்டை ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சார்பில் இரண்டு நாட்கள் இந்தப் பயிலரங்கம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கல்லூரியின் நிர்வாக அதிகாரி லட்சுமணன் கூறியது: 'நாடி பரிக்ஷா' என்பது ஆயுர்வேதம்-சித்த மருத்துவ முறையின் பண்டைய கால பரிசோதனை முறையாகும். மனிதர்களின் நாடியைப் பிடித்தே, அவர்களுக்கு என்னென்ன நோய்கள், குறைபாடுகள் உள்ள என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப சாதனங்கள் கண்டறியப்படுவதற்கு முன்பாகவே பண்டைய மருத்துவர்கள், நாடியின் மூலம் நோய்களை எளிதில் கண்டறிந்தனர். ஆனால் அந்தக் கலை தற்போது அழிந்து வருகிறது. எனவே, அந்தக் கலையை ஆயுர்வேத பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் இந்தப் பயிலரங்கம் நடைபெற உள்ளது.
இந்தப் பயிலரங்கில் சர்க்கரை நோயாளிகள், ஒரு சிறுநீரகம் கொண்டவர், கர்ப்பிணிகள் என 100 பேரை வரவழைத்து, அவர்களின் நாடியைக் கொண்டு உடலில் உள்ள குறைபாடுகளைக் கண்டறியும் வகையிலான நேரடி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிலரங்கில் ஆயுர்வேத மருத்துவப் பேராசிரியர்கள், மாணவர்கள் என மொத்தம் 100 பேர் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.
நாகர்கோவிலைச் சேர்ந்த வைத்தியரும், வர்மானியம் அறக்கட்டளையின் நிறுவனருமான டாக்டர் அர்ஜுனன், சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் எஸ்.கே.சசி ஆகியோர் இந்த 'நாடி பரிக்ஷா' முறையைப் பயிற்றுவிக்க உள்ளனர்.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலய கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் வி.எல்.விஷ்ணு போட்டி பயிலரங்குக்கு தலைமை வகிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com