தொற்றாத வாழ்வியல் நோய்கள் பெரும் சவாலாக உள்ளன: சித்த மருத்துவர் கு.சிவராமன்

தொற்றாத வாழ்வியல் நோய்களே இன்றைய இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கு பெரிய சவாலாக இருந்து வருகின்றன என்று சித்த மருத்துவர் கு.சிவராமன் கூறினார்.
டாக்டர் வ.செ.நடராஜன் எழுதிய 'உணவு முறையை மாற்றுவோம் மற்றும் முதுமையை முறியடிப்போம்' (ஆங்கிலம்) குறுநூல் வெளியீட்டு விழாவில் மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி,
டாக்டர் வ.செ.நடராஜன் எழுதிய 'உணவு முறையை மாற்றுவோம் மற்றும் முதுமையை முறியடிப்போம்' (ஆங்கிலம்) குறுநூல் வெளியீட்டு விழாவில் மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி,

தொற்றாத வாழ்வியல் நோய்களே இன்றைய இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கு பெரிய சவாலாக இருந்து வருகின்றன என்று சித்த மருத்துவர் கு.சிவராமன் கூறினார்.
டாக்டர் வ.செ.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை சார்பில் முதியவர்களை பராமரிப்பவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கமும், குறுநூல்கள் வெளியீட்டு விழாவும் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் நூல்களை வெளியிட்டு, சித்த மருத்துவர் கு.சிவராமன் பேசியது:
இன்றைய இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கு தொற்றாத வாழ்வியல் நோய்கள் பெரும் சவாலாக உள்ளன. ஒரு கோப்பை தேநீரில், உலக நாடுகள் முழுவதும் தடை செய்யப்பட்ட 13 வகையான ரசாயன பூச்சிக்கொல்லிகள் உள்ளன. ஊடகங்களும், பெரு வணிக நிறுவனங்களும் முன்நிறுத்தும் உணவுப் பொருட்களுக்குப் பின்னால் வணிக வன்முறை உள்ளது. குப்பையான தொழில்நுட்பங்களைக் கொண்டு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. நாம் மறந்த இழந்த மரபுகளை மீட்டெடுத்து நம் முதுமையை காக்கவும், அந்த பாரம்பரிய விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும் நாம் முன்வர வேண்டும் என்றார் அவர்.
டாக்டர் வ.செ.நடராஜன் பேசியது: முதியவர்களுக்கு மிக அதிகமான கட்டுப்பாடுகள் விதிப்பதைத் தவிர்க்க வேண்டும். முதியவர்களுக்கான குறுகிய கால, நீண்டகால பராமரிப்பு மையங்களின் தேவை அதிகரித்துள்ளது. 2018-இல் அமையவுள்ள தேசிய முதியோர் நல மையத்தில் இதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்படும். கிராமப்புற முதியவர்கள் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார் அவர்.
இந்த விழாவில் நரம்பியல் மருத்துவர் புவனேஸ்வரி ராஜேந்திரன், எலும்புமூட்டு இயல் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ், மனநல மருத்துவர் ஸ்ரீதர் வைத்தீஸ்வரன், மகளிர் நல மருத்துவர் ஜி.எஸ்.சாந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com