'குழந்தைகளுக்கு 6 மாதம் தாய்ப்பால் கொடுப்பது அவசியம்'

பிறந்த குழந்தைகளுக்குத் தொடர்ந்து 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை மருத்துவ இயக்குநர்
உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு மனிதச்சங்கிலியில் கலந்துகொண்டோர்.
உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு மனிதச்சங்கிலியில் கலந்துகொண்டோர்.

பிறந்த குழந்தைகளுக்குத் தொடர்ந்து 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ்.பாலசுப்ரமணியன் கூறினார்.
ஆகஸ்ட 1 முதல் 7-ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வார விழா அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக டாக்டர் பாலசுப்ரமணியன் கூறியது:
பிறந்த குழந்தைகளுக்குத் தொடர்ந்து 6 மாதம் தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டியது அவசியம். எனவே, இந்த ஆண்டு தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழாவில் தாய்ப்பால் கொடுப்பது குறித்து சமூகமாக இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சுவரொட்டி உருவாக்குதல், வினாடிவினாப் போட்டிகளை நடத்த உள்ளோம். கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தி, தாய்ப்பால் கொடுப்பது குறித்த விழிப்புணர்வை சமுதாயத்தில் அதிகரிக்கச் செய்ய உள்ளோம்.
சமூக சேவகர்கள் மூலமாகவும் தாய்ப்பாலின் அவசியத்தை அனைத்துத் தரப்பு மக்களிடம் கொண்டு செல்ல உள்ளோம். சரியான முறையில் தாய்ப்பால் கொடுப்பது குறித்து பிரசவித்த தாய்மார்களுக்கு கற்றுக்கொடுக்கும் வகையில் செவிலியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையிலான பயிலரங்கையும் நடத்த உள்ளோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com