'குழந்தையின் முதல் தடுப்பூசி தாய்ப்பால் தான்

பிறந்த குழந்தையின் முதல் தடுப்பூசி தாய்ப்பால் தான் என்று சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் நலத் துறை பேராசிரியர் டி.அனுராதா கூறினார்.
'குழந்தையின் முதல் தடுப்பூசி தாய்ப்பால் தான்

பிறந்த குழந்தையின் முதல் தடுப்பூசி தாய்ப்பால் தான் என்று சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் நலத் துறை பேராசிரியர் டி.அனுராதா கூறினார்.
தாய்ப்பால் குறித்து எதிர்கால தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பாரதி மகளிர் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் நலம், சமூகம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறையின் சார்பில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேராசிரியர் டி.அனுராதா பேசியது: தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது.
வளர் இளம் பருவத்தில் உள்ள பெண்கள் எதிர்காலத்தில் தாய்மை அடையும்போது அதனை எதிர்கொள்ளும் வகையில் மனதளவிலும், உடலளவிலும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் தான் ஒரு குழந்தை பிறந்த உடன் அதற்கு அளிக்கப்படும் முதல் தடுப்பூசி ஆகும். தாய்ப்பால் கொடுப்பது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு நோய்களில் இருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது. எனவே குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் தொடர்ந்து தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். மேலும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு எதிர்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றார்.
நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் மாணவிகளின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விடையளித்தனர். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம்பல நமச்சிவாயம், குழந்தைகள் நலத் துறைத் தலைவர் டாக்டர் அரவிந்த் உள்ளிள்ட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com