டெங்கு ஒழிப்புக்கு 420 தாற்காலிகப் பணியாளர்கள் நியமனம்: ஆட்சியர் தகவல்

டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணிக்கு 14 ஒன்றியங்களில் 420 தாற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கே.முத்து கூறினார்.
காவேரிராஜபுரம் கிராமத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கிய மாவட்ட ஆட்சியர் (பொ) முத்து.
காவேரிராஜபுரம் கிராமத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கிய மாவட்ட ஆட்சியர் (பொ) முத்து.

டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணிக்கு 14 ஒன்றியங்களில் 420 தாற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கே.முத்து கூறினார்.
திருவாலங்காடு ஒன்றியத்துக்குள்பட்ட காவேரிராஜபுரத்தில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமை ஆட்சியர் (பொறுப்பு) கே.முத்து வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர், அப்பகுதி மக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினார்.
இதையடுத்து, திருத்தணி வட்டம், முருக்கம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமைப் பார்வையிட்டு பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினார்.
பின்னர், பள்ளி மற்றும் செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற, காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கி வைத்தார். இதுகுறித்து ஆட்சியர் (பொறுப்பு) முத்து பேசியதாவது: மழைக் காலத்தை முன்னிட்டு காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் பிரதி செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பொது சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித் துறைகள் இணைந்து முன் பயணத் திட்டத்தை தயாரித்து கூட்டு துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் ஜனவரி முதல் இன்று வரை 39 நபர்களுக்கு டெங்கு நோய் தாக்கம் இருப்பது பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.
இவர்களில் 35 பேர் தகுந்த சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 4 பேர் திருவள்ளூர் அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு கொசுப்புழு ஒழிப்பு தாற்காலிகப் பணியாளர்கள் ஒரு ஒன்றியத்தில் 30 பேர் வீதம் 14 ஒன்றியங்களில் 420 பணியாளர்களும், ஒரு பேரூராட்சியில் 2 பேர் வீதம் 10 பேரூராட்சிகளில் 20 பணியாளர்களும், திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு மற்றும் பூந்தமல்லி ஆகிய 4 நகராட்சிகளில் 50 பேர் வீதம் 200 பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். ஆவடி நகராட்சியில் மட்டும் 150 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
நிகழ்ச்சிகளில் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மருத்துவர்.பி.வி.தயாளன், துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்), மருத்துவப் பணியாளர்கள், ஊரக வளர்ச்சிப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com