உங்கள் ஆயுசு அதிகரிக்க வேண்டுமா?

எப்படி சுவாசிக்கிறோம் என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது தானாக
உங்கள் ஆயுசு அதிகரிக்க வேண்டுமா?

எப்படி சுவாசிக்கிறோம் என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது தானாக நடக்கும் ஒரு செயல் என்று அதைப் பற்றிய கவனம் நம்மில் பலருக்கு இருக்காது. ஆனால் சரியாக மூச்சுவிடவில்லை என்றால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆயுளும் குறையும். நம் உடல்பகுதிகளில் பலவித வலிகளுக்கும் நோய்க்கும் காரணம் மூச்சை முறையாக விடாததுதான். சிலர் நெஞ்சில் சுவாசிப்பார்கள். அவ்வாறு சுவாசிப்பதால் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் செல்வதில்லை. 

ஒரு மனிதனுடைய ஆயுள் காலம் அவனுடைய உள் மூச்சு மற்றும் வெளி மூச்சை விடும் வேகத்தைப் பொருத்து உள்ளது என்கிறார்கள் யோகா ஆசிரியர்கள். பொதுவாக மனிதன் ஒரு நிமிடத்தில் 16 தடவைகள் மூச்சை உள் இழுத்து வெளியில் விடுகின்றான். ஆனால் வேக வேகமாக மூச்சை உள் இழுத்து வெளியில் விடும் போது உடலில் ரத்த ஒட்டத்தின் வேகமும் அதிகரிக்கின்றது. ரத்த ஓட்டம் அதிகரிக்கையில் மனிதனின் வாழ்நாளும் குறைகிறது. இதே மூச்சை இன்னும் குறைவாக அதாவது 8 தடவை உள் இழுத்து வெளியில் விடும்போது ஒருவருடைய ஆயுள் காலத்தில் இரண்டு நிமிடங்கள் அதிகரிக்கின்றது. குறைவான தடவை மூச்சை உள் இழுத்து வெளியில் விட்டாலும் உடம்புக்கு தேவையான சத்துக்கள் உடலுக்கு செல்வதில் எந்த தடையும் இருக்காது. அவசர அவசரமாக மூச்சை உள் இழுத்து வெளியில் விடுவதில் உடலுக்கு எந்தப் பயனும் இல்லை மாறாக உடல் நலக் கேடுகளை விளைவிக்கும். நன்றாக ஆழ்ந்து மூச்சு விடும்போது உடல் நலம் அதிகரிக்கும், நாள் பட்ட நோய்களும் குணமாகும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே நீண்ட நாள் உயிர் வாழ்வதற்கு குறைவாக மூச்சை உள் இழுத்து அதிக நேரம் தக்க வைத்து பிறகு வெளிவிட வேண்டும். இதற்கு தகுந்த பயிற்சி எடுத்து கொண்டால் ஒருவருடைய ஆயுள் அதிகரிக்கும் என்பது உண்மை. அந்த பயிற்சிதான் பிராணயமம்  எனப்படும் மூச்சு பயிற்சி. 

மூச்சின் அளவு

நடக்கும் போது - 8 தடவை மூச்சை உள் இழுத்து 12 தடவை வெளி விடுகிறோம். 

ஓடும் போது - 27 தடவை மூச்சை உள் இழுத்து 54 தடவை மூச்சை வெளி விடுகிறோம். 

தூங்கும் போது - 30 தடவை மூச்சை உள்  இழுத்து 48 தடவை மூச்சை வெளி விடுகிறோம். 

வீட்டு வேலைகள் செய்யும் போது - 10 தடவை மூச்சை உள் இழுத்து 20 தடவை மூச்சை வெளி விடுகிறோம்.   

வாக்குவாதம் அல்லது சண்டையின் போது - 24 தடவை மூச்சை வெளிவிட்டு 12 தடவை மூச்சை உள் இழுக்கிறோம்  

உடல் உறவின் போது -  64 தடவை மூச்சை வெளிவிட்டு 24 தடவை மூச்சை உள் இழுக்கிறோம்.  

மேற்பட்ட விஷயங்களால் அதிகப்படியான மூச்சை வெளிவிட்டு நம் ஆயுளை நாம் குறைத்துக் கொள்கிறோம். ஆனால் அவற்றை செய்யாமலும் இருக்க முடியாது. இதற்குரிய ஒரே வழி மூச்சுப் பயிற்சிதான். பிராணாயாமம் மற்றும் மூச்சுப்பயிற்சி செய்தால் மூச்சை சரியான வகையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். தகுந்த ஆசிரியர் மூலம் பயிற்சி பெறுவது நலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com