வியக்க வைக்கும் வேப்பிலை மருத்துவம்! வெறும் இலையை மெல்வதிலேயே இவ்வளவு பலன் கிடைக்குமா?

வேர் முதல் இலை, பூ, பழம், பட்டை என அனைத்திலும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது வேப்ப மரம். இவ்வளவு ஏன் வேப்ப மரத்தில் இருந்து வீசும் காற்றை சுவாசித்தாலே போதும் உடலின் ஆரோக்கியம் மேம்படும்.
வியக்க வைக்கும் வேப்பிலை மருத்துவம்! வெறும் இலையை மெல்வதிலேயே இவ்வளவு பலன் கிடைக்குமா?

உங்கள் வீட்டில் வேப்ப மரம் உள்ளதா, அப்படியென்றால் உங்களுடைய பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்து விட்டது என சந்தோஷப் படுங்கள். நம்முடைய பாரம்பரிய சித்த மருத்துவமாக இருந்தாலும் சரி, நாட்டு மருத்துவமாக இருந்தாலும் சரி வேப்ப மரத்திற்கு அதில் முக்கிய பங்குண்டு.

வேர் முதல் இலை, பூ, பழம், பட்டை என அனைத்திலும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது வேப்ப மரம். இவ்வளவு ஏன் வேப்ப மரத்தில் இருந்து வீசும் காற்றை சுவாசித்தாலே போதும் உடலின் ஆரோக்கியம் மேம்படும். அதனால் தான் வீட்டிற்கு ஒரு வேப்ப மரம் வைத்து அதைத் தெய்வமாகவே பெண்கள் வழிப்படுகிறார்கள். நமது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் கிருமிகளை கொன்று, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கக் கூடியது வேம்பு.

குறிப்பாக வேப்பிலையைக் குளிர் காலங்களில் அம்மியில் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிடுவது, அம்மை, அக்கி போன்ற நோய்கள் வந்தால் குளிக்கும் நீரில் இதைப் போட்டு குளிப்பது, படுக்கையைச் சுற்றி வேப்பிலையை வைத்துக் கொள்வது என இன்னமும் இந்த வீட்டு மருத்துவத்தைப் பலரும் கடைப்பிடித்துத் தான் வருகிறோம். ஏனென்றால் இது ஒரு சிறந்த கிருமி நாசினி ஆகும். இத்தகைய வேப்பிலையைத் தினமும் வாயில் போட்டு மெல்வதால் உங்களுக்கு கிடைக்கக் கூடிய அற்புதமான சில பலன்களைப் பற்றி அறிவீர்களா? வாருங்கள் பார்ப்போம்.

சரும பாதுகாப்பு:

வேப்பிலையைச் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மை நீங்கி சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். மேலும் வேப்பிலையில் இருக்கும் பாக்டீரியா போன்ற கிருமி நாசினி குணம் சருமத்தில் ஏற்படும் எரிச்சல், நோய் தொற்று, முகப் பரு போன்ற அனைத்துச் சரும பிரச்னைக்கும் தீருவாய் அமையும். சுத்தமான பளிச்சிடும் மேனியைப் பெற உங்களுக்கு ஆசை இருந்தால் (யாருக்குத் தான் இருக்காது) காலை வேலையில் வேப்பிலையை மெல்லுங்கள். வேப்பிலையின் கசப்பு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் வேப்பிலையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வெடிக்கட்டி அதில் சிறிது தேன் சேர்த்து குடித்தால் போதும், அதே அளவு பலனை பெற முடியும். கரும்புள்ளி, முகப்பரு போன்ற அனைத்தில் இருந்தும் விடுதலைப் பெருங்கள்.

கூந்தல் ஆரோக்கியம்:

மன அழுத்தத்தால் முடியின் வேர்கால்கள் பாதிக்கப்பட்டு முடி உதிர்வு பிரச்னை ஏற்படுகிறது. தினமும் வேப்பிலை சாப்பிடுவதால் வேப்பிலையில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் முடியின் வேர்கால்களை வலுப்படுத்தும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. வேப்பிலை முடி வளர்ச்சிக்குக் காரணமான உயிரணுக்களைத் தூண்டிவிட்டு கூந்தல் அடர்த்தியையும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் வேப்பிலையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரில் தலைக்கு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். வேப்பிலையில் இருக்கும் புஞ்சை தடுப்பு குணம் இதனால் ஏற்படும் பொடுகு, பெண் போன்றவை அழித்து உங்கள் தலையின் மேற் பகுதியை பாதுகாக்கும்.

கண்களின் ஆரோக்கியத்தைச் சரி செய்யும்:

கண்களின் ஆரோக்கியத்திற்கு வேப்பிலை எவ்வளவு முக்கியம் என்று நமது ஆயுர்வேதத்திலேயே கூறப்பட்டுள்ளது. வேப்பிலையைச் சாப்பிடுவது பார்வை திறனை பன்மடங்கு அதிகரிக்கும். உங்கள் கண்களில் எரிச்சல், சிவந்த கண்கள் அல்லது தூக்கமின்மை காரணமாகச் சோர்ந்த கண்கள் போன்ற எந்த பிரச்னை இருந்தாலும் சில வேப்பிலைகளை நீரில் கொதிக்க வைத்து அது ஆரிய பின்பு அந்த நீரில் கண்களை கழுவினால் போது. 

செரிமானத்தை அதிகரிக்கும்:

வேப்பிலை சாப்பிடுவது நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கான நன்மைகளை உங்களது கல்லீரலுக்கு தரும். கல்லீரலின் ஆரோக்கிய அதிகரித்தால் இயல்பாகவே செரிமானமும் அதிகரிக்கும். மேலும் தினமும் வேப்பிலை சாப்பிடுவதால் அது குடலில் இருக்கும் பாக்டீரியா போன்ற கிருமிகளை அழித்து வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவும். 

வாய் ஆரோக்கியம்:

நமது முன்னோர்கள் வேப்ப மர குச்சியில் தான் தினமும் காலையில் பல் துலக்கினர், அவர்களது அந்தச் செயலுக்கான காரணம் நாம் அனைவருக்கும் தெரிந்ததே, அது பற்களை வலுப்படுத்தும். அப்படி இருக்கையில் தினமும் வேப்பிலையை வாயில் போட்டு மெல்வதிலும் அதே அளவு பலன் இருக்கிறது. பற்களில் இருக்கும் கிருமிகளை கொன்று பற்களின் ஈற்களை வலுப்படுத்தும். மேலும் வேப்பிலையை மெல்வதால் பற்களின் பளபளப்பும் அதிகரிக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் தங்களது 4-வது, 5-வது மாதங்களில் வேப்பிலையை சாப்பிடக் கூடாது, ஏனென்றால் வேப்பிலை நமது உடலின் உஷ்ணத்தை அதிகரிக்கும் இது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதே போல் கற்பமாக முயற்சிக்கும் பெண்களும் வேப்பிலையைச் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com