இந்த சீசனில் கிடைக்கும் பனங்கிழங்கைப் பற்றிய 10 ருசிகரமான தகவல்!

பனங்கிழங்கில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இதில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.  
இந்த சீசனில் கிடைக்கும் பனங்கிழங்கைப் பற்றிய 10 ருசிகரமான தகவல்!
  1. பனை மரத்தில் உள்ள நுங்கு மூன்று விதைகளை கொண்டிருக்கும். இளசாக இருக்கையில் அதைச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் முற்றிப் போனால் சாப்பிட முடியாது. 
  2. இந்த முற்றிய நுங்கினை மண்ணில் புதைத்துவிட, சில நாட்கள் கழித்து அது முளை விட்டு பனை மரமாக வளர ஆரம்பித்துவிடும். அப்படி முளைவிட்ட உடனே தோண்டிப் பார்த்தால், நீண்ட குச்சி போல காணப்படுவதுதான் பனங்கிழங்கு. அதை வேரோடு பிடுங்கி வந்து, வேகவைத்து சாப்பிடுவார்கள். பனம் கிழங்கின் முனை கூராகவும், மறு முனை சுமார் ஒரு அங்குலம் விட்டம்  கொண்டதாகவும் உள்ள ஒடுங்கிய  கூம்பு வடிவான இக் கிழங்கு ஒரு அடி வரை நீளமானது. 
  3. பனங்கிழங்கை சிறிது மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, பின்னர் கிழங்கை வெயிலில் காய வைத்து, அதை, மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியம் அதிகரிக்கும். 
  4. பனங்கிழங்கில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இதில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.  
  5. பனங்கிழங்கில் பித்தம் சற்று அதிகமாக இருப்பதால், இதைச் சாப்பிட்டப் பின் சிறிது மிளகு மற்றும் பூண்டுகளை கலந்து சாப்பிட வேண்டும்.   

  1. பனங் கிழங்கை தண்ணீர் விட்டு அவித்து பின்னர் மாவாக்கிப் புட்டு, கூழ் உள்ளிட்ட உணவு வகைகளைச் செய்யலாம்.
  2. அவித்த கிழங்கை வெய்யிலில் காய வைத்துப் பெறப்படும் பொருளை புழுக்கொடியல் என்று கிராமப்புறங்களில் அழைக்கிறார்கள்.
  3. இந்தப் புழுக்கொடியலை நேரடியாகவே உண்ணலாம். இது நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கக் கூடியதாகும். பஞ்சம் போன்ற பிரச்னைகளை தமிழகத்தில் தலைவிரித்தாடியபோது ஏழை எளிய மக்கள் இந்த உணவினை சாப்பிட்டு உயிரைத் தக்க வைத்தனர்.
  4. பனங்கிழங்கை அவித்து காய வைத்து அதன் பின்னர் பொடித்து, அதில் சர்க்கரை மற்றும் தேங்காய் சேர்த்து சாப்பிட, மிகவும் சுவையாக இருக்கும். இந்தக் கிழங்கை அவித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு அரைத்து துவையலாக்கியும் சாப்பிடலாம். 
  5. பனங்கிழங்கு குளிர்ச்சியானது. இந்தக் குளிர் காலத்தில் உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்க உதவும் கிழங்கு இது. வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் ஆற்றலும் பனங்கிழங்கில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com