மீன் சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வருமா! ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன?

நீங்கள் மீன் உணவுகளை விரும்பி சாப்பிடும் வழக்கம் உள்ளவரா?
மீன் சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வருமா! ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன?

நீங்கள் மீன் உணவுகளை விரும்பி சாப்பிடும் வழக்கம் உள்ளவரா? இது உங்களுக்கான நல்ல செய்தி.

வாரத்தில் ஒரு நாளாவது மீன் வகையறாக்களைச் சமைத்துச் சாப்பிடுவோருக்கு, இரவில் நல்ல உறக்கம் வரும், குழந்தைகள் இதனை சாப்பிடும் போது அவர்களின் ஐக்யூ மேம்படும் என்று அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.

பெனிசில்வேனியாவில் உள்ள பல்கலைக்கழகம் முன்னெடுத்த இந்த ஆய்வில், மீன் வகை உணவுகளை அதிகம் சாப்பிடும் குழந்தைகளின் நுண்ணறிவுத் திறன் (ஐக்யூ) மற்ற குழந்தைகளை விட மிகச் சிறப்பாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

ஒமேகா 3S (Omega 3s) என்ற சத்து வகை வகையான மீன் உணவுகளை சமைத்து சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கிறது.

இது மீன் உணவுகள் மூலம் மட்டுமே பெரிதும் கிடைக்கக் கூடிய சத்து என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல ஆய்வாளர் ஜியாங்ஹாங் லியூ என்பவரின் தலைமையில் சீனாவில் இந்த ஆய்வு நடைபெற்றது.  9-லிருந்து 11-வயதுக்குட்பட்ட, 541 குழந்தைகள் இந்த உணவுப்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் 54 சதவிகிதம் சிறுவர்களும், 46 சதவிகித சிறுமியரும் தங்களுக்குத் தரப்பட்ட கேள்வித்தாளில் ஒரு மாதத்தில் அவர்கள் மீன் உணவுகளை எத்தனை தடவை சாப்பிடுகிறார்கள், எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதை பதிவு செய்தார்கள்.

இதுவரை மீன் சாப்பிட்டதே இல்லை, எப்போதாவது சாப்பிடுவேன், வாரம் ஒரு முறையேனும் கட்டாயம் சாப்பிடுவேன் என்பதாக அந்தக் கேள்வித் தாள் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கேள்வித்தாளுக்கு விடை அளித்த பின்னர் அவர்களுக்கு நுண்ணறிவுச் சோதனை நடைபெற்றது. பேச்சுத்திறன், அறிவுத்திறன் உள்ளிட்ட பலவிதமான தேர்வுகள் மூலம் அவர்களின் ஐக்யூ சோதிக்கப்பட்டது.

இக்குழந்தைகளின் பெற்றோர்களையும் அழைத்து இரவில் அவர்கள் எப்படி தூங்குகிறார்கள், எத்தனை மணிக்கு படுக்கச் செல்கிறார்கள், எத்தனை மணிக்கு காலையில் எழுந்து கொள்கிறார்கள் என்பதை எல்லாம் கேட்டறிந்து அத்தகவல்களையும் பதிவு செய்தனர்.

இந்தச் சோதனைகளின் முடிவில், வாரம் ஒரு முறையேனும் மீன் உணவுகளைச் சாப்பிட்ட குழந்தைகள் ஐக்யூ தேர்வில் 4.8 புள்ளிகள் பெற்றிருந்தனர்.

மீன் எப்போதாவது சாப்பிடும் குழந்தைகளும், ஒருபோதும் சாப்பிடாத குழந்தைகளும் இந்த நுண்ணறிவுப் போட்டியில் 3.3 புள்ளிகளே பெற்றிருந்தனர். இவர்களின் தூக்கமும் குறைந்த அளவே இருந்துள்ளது என்பதையும் ஆய்வின் முடிவில் கண்டறிந்தார்கள்.

நன்றாகத் தூங்கி நல்ல ஓய்வெடுத்தால்தான் உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் ஒரு நாளை எதிர்கொள்ள முடியும். உறக்கப் பிரச்னைகள் பலவிதமான மனநோய்களுக்கு மூலகாரணம். 

ஒமேகா 3 சத்துள்ள மீன் உணவுகளை உட்கொண்ட குழந்தைகளின் உறக்கம் மற்ற குழந்தைகளின் உறக்கத்தைவிட கணிசமாக அதிகமான நேரத்தில் இருந்தது என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. குழந்தைகளிடையே மீன் உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதை ஊக்கப்படுத்தவேண்டும். இதில் நிறைய ஆரோக்கியமான விஷயங்கள் உள்அடங்கியுள்ளது என்றனர் பின்டோ - மார்டின். 

தினந்தோறும் உங்கள் மெனுவில் கட்டாயம் மீன் உணவுகளை சேர்த்துக் கொள்ளும்படி இந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்கிறார்கள். காரணம் வாரம் ஒரு முறை மீனை சாப்பிட்ட போதே அதிக பலன்கள் அதிகம் என்பது நிரூபணம் ஆகியுள்ள நிலையில், தினமும் சாப்பிட்டால் பலன்கள் அதிகரிக்கும் என்றனர்.

இந்த ஆய்வு அறிக்கை சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் ஜர்னல் (Scientific Reports journal) எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com