உங்களுக்கு நாற்பது வயதென்றால் நிச்சயம் இதைப் படித்துவிடுங்கள்

சிலருக்கு எழுபது வயதிலும் நிறைந்த ஆரோக்கியம் இருக்கும். ஒருசிலருக்கு முப்பது வயதுக்கு
உங்களுக்கு நாற்பது வயதென்றால் நிச்சயம் இதைப் படித்துவிடுங்கள்

சிலருக்கு எழுபது வயதிலும் நிறைந்த ஆரோக்கியம் இருக்கும். ஒருசிலருக்கு முப்பது வயதுக்கு மேல் சில உடல் உபாதைகள் ஏற்படத் தொடங்கி நாற்பதில் ஒரு வியாதியஸ்தராக மாறிப்போயிருப்பர்.

எனவே நாற்பது வயதுக்கு மேல் உடல் நலத்தில் அக்கறை எடுத்து தேவையானா ஹெல்த் செக் அப் செய்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக நாற்பது வயதில் ஆண்களுக்கு இதய நோய் ஏற்படுகிறது என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு. இதற்குக் காரணம் மன அழுத்தம், வேலையில் ஏற்படக் கூடிய ஸ்ட்ரெஸ், உணவுகளில் அக்கறை காட்டாதலால் ஏற்பட்டுள்ள உடல் பருமன் போன்றவையாகும். மேலும் சிலருக்கு இளம் வயதிலேயே தலைமுடி நரைத்துவிடும் அல்லது வழுக்கை விழும். இதுவும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான ஒரு அறிகுறி என்கிறது அந்த ஆய்வு.

இந்தியாவில் 40 வயது நிறைந்த ஆண்களை இரண்டாயிரம் பேரை  ஒருங்கிணைத்து ஆய்வொன்றினை மேற்கொண்டனர். பிரிட்டிஷ் இதய அறக்கட்டளையின் இணை மருத்துவ இயக்குனர் மைக் நாப்டன் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. ஆய்வு முடிவில் தலைமுடி அதிகம் இருப்பவர்களை விட, இளநரை அல்லது வழுக்கை விழுந்த ஆண்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் வாழ்வியல் பிரச்னைகள், அதிகரித்து வரும் மன அழுத்தப் பிரச்னைகள் என்றனர் ஆய்வாளர்கள். 
 
வேலை செய்யாமல் வாழ முடியாது. எனவே வேலை சார்ந்த மன அழுத்தம் என்பது இன்றைய தினத்தின் மாற்றி அமைக்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனாலும் அதில் கவனத்துடன் செயல்பட முடியும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். அதிக கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற ஆபத்து காரணிகளை அது குறைக்கச் செய்யும். எதிலும் வேகம் என்றில்லாமல் சற்று நிதானமான முறையில் ஒருவரது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளலாம். இவை நாற்பது வயதைக் கடந்தோர் கவனம் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்’ என்று மைக் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com