சர்க்கரை சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

சர்க்கரை என்பது ஐஸ் கிரீம், கூள் டிரிங்ஸ் போன்றவற்றில் இறுக்கு சர்க்கரையையும் சேர்த்துத் தான். ஒருவேளை நாம் சர்க்கரை சாப்பிடுவதையே நிறுத்திவிட்டால் என்னவாகும் என்று யோசித்தது உண்டா?
சர்க்கரை சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

சர்க்கரை, அறுசுவைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சுவையான இனிப்பு சுவையை கொண்டது. இனிப்பாக எந்த உணவைப் பார்த்தாலும் பார்ப்பவரின் கண்களை கவர்ந்து வாயில் நீர் சுரக்க செய்யும் சக்தி இதற்கு உண்டு. நம் அன்றாட வாழ்வில் நாள் ஒன்றிக்கு நாம் 40 டீஸ்பூன்களுக்கும் அதிகமான சர்க்கரையை சாப்பிடுகிறோம் என்கிறது ஒரு ஆராய்ச்சி முடிவு. 

சர்க்கரை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய சீர்கேடுகள் இருக்கிறது என்று தெரிந்தும், வெகு சிலரால் மட்டும் நாவை அடக்கி சர்க்கரையை தங்கள் வாழ்வில் இருந்து நீக்க முடிகிறது. அதுவும் படிப்படியாகத்தான். சர்க்கரை என்பது ஐஸ் கிரீம், கூள் டிரிங்ஸ் போன்றவற்றில் இறுக்கு சர்க்கரையையும் சேர்த்துத் தான். ஒருவேளை நாம் சர்க்கரை சாப்பிடுவதையே நிறுத்திவிட்டால் என்னவாகும் என்று யோசித்தது உண்டா? அப்படி நிறுத்தினால் நமது உடலில் எந்த மாதிரியான மாற்றங்கள் எல்லாம் ஏற்படும் என்று தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.

முதல் நாள்: சாதாரண விஷயங்களுக்கு கோவப்படுவது போன்ற திடீர் மனநிலை மாற்றங்கள் (Mood swings) ஏற்படுவது குறையும். உங்களின் செரிமான சக்தி அதிகரிக்கும்.

மூன்றாவது நாள்: உங்கள் உடலின் சக்தி அதிகரித்து சுறு சுறுப்புடன் இருப்பதைப் போல் உணர்வீர்கள். மேலும் உடலின் பலமும் பன்மடங்கு அதிகரித்து இருக்கும்.

ஏழாவது நாள்: இரவில் நல்ல தூக்கம் வரும். நடு ராத்திரியில் எழுந்திருப்பது போன்ற எந்த ஒரு இடையூறும் இல்லாமல் தூங்குவீர்கள். அதனால் காலையில் எந்தவித சோர்வும் இல்லாமல் படுக்கையைவிட்டு இறங்குவீர்கள்.

பத்தாவது நாள்: உங்களது உடல் எடை 1-2 கிலோ வரை குறையும். ரத்த அழுத்தமும் சீராக மாறி இருக்கும்.

முப்பதாவது நாள்: உங்களுடைய முகர்தல் உணர்ச்சி மற்றும் சுவை உணர்ச்சி அதிகரித்து இருக்கும். சரியாக ருசி பார்ப்பது மற்றும் நறுமணத்தை வைத்தே பொருள் என்னவென்று யூகிப்பது போன்ற திறன்கள் வளர்ந்திருக்கும்.

முப்பத்தைந்தாவது நாள்: முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவடைந்திருக்கும்.

ஒரு வருடத்தில்: உடலில் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி அழகான உடல் தோற்றத்தை பெற்றிருப்பீர்கள். மேலும் உங்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உங்களது மூளையின் செயல்பாடும் அதிகரிக்கும். எப்போதும் எச்சரிக்கையாக மிகவும் துடிப்புடன் இருப்பீர்கள்.

இதை நினைவில் கொள்ளுங்கள்: ஆரம்பத்தில் சர்க்கரையை விடுவது என்பது சுவையே இல்லாத ஒரு வாழ்க்கைக்குள் செல்வதை போல் உங்களுக்குத் தோன்றும், ஆனால் இவை அனைத்தும் உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு என்று நம்புங்கள். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 25 கிராமை விட அதிகமான சர்க்கரை எடுத்துக் கொள்வது இல்லை என்று முடிவு செய்யுங்கள். பின்னர் படி படியாக உங்களை நீங்களே எளிதாக கட்டுப் படுத்திக் கொள்ள முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com