ரூபெல்லா தடுப்பூசி முகாமில் கடைப்பிடிக்க வேண்டிய விவரம்

குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி அளிக்கும் முகாமில் கவனிக்கப்பட வேண்டிய அறிவுரைகள் குறித்து, கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி அளிக்கும் முகாமில் கவனிக்கப்பட வேண்டிய அறிவுரைகள் குறித்து, கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தட்டம்மை நோயை தடுக்கும் ரூபெல்லா தடுப்பூசி அனைத்துக் குழந்தைகளுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. பிறந்து 9 மாதம் முதல் 15 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் 6 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி அளிக்க திட்டமிடப்பட்டு, தற்போது வரை 2.5 லட்சம் குழந்தைகளுக்கு ஊசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரூபெல்லா தடுப்பூசி முகாமில் ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியவை குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சோர்வாகவோ, காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியோ இருக்கும் குழந்தைகளுக்கு தற்போதைக்கு ரூபெல்லா தேவையில்லை. காலையில் சாப்பிடாமல் வந்திருக்கும் குழந்தைகளை சாப்பிட வைத்து ரூபெல்லா அளிக்கலாம்.

நோய் பாதிப்பால் ஏற்கெனவே சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி அளிப்பதை தள்ளிப்போட வேண்டும். ஊரகப் பகுதிகளில் ரூபெல்லா தடுப்பூசி அளிக்கும் முன்பு குழந்தைகளின் பெற்றோரிடம் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை பள்ளிகளில் ரூபெல்லா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com