சர்க்கரை நோய் வருமுன் காப்பது எப்படி?

40 வயது ஆகிவிட்டால் நீரிழிவும் ரத்த அழுத்தமும் வருவது சகஜம் என்று நினைக்கிறார்கள்.
சர்க்கரை நோய் வருமுன் காப்பது எப்படி?

வீட்டுக்கு விருந்தினர்கள் வருகிறார்கள். காபி தயாரிக்கும் ஆயத்தம் நடக்கிறது. அன்புடன் கேட்கிறார்கள்… ‘காபியில சுகர் சேர்க்கலாமா?’

40 வயது ஆகிவிட்டால் நீரிழிவும் ரத்த அழுத்தமும் வருவது சகஜம் என்று நினைக்கிறார்கள். ‘ஆமாமா, சுகர், பி.பி எல்லாம் இருக்கு. வேலை டென்ஷன் பாருங்க!’ என்கிறார்கள். நீரிழிவு நோயாளிகளுக்கென்று இப்போதெல்லாம் இனிப்புகளும் சாக்கலேட்டுகளும் பிரத்யேகமாகத் தயாராகின்றன. சர்க்கரை நோய் இப்போது இளைஞர்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கும்கூட வர ஆரம்பித்து விட்டது. சர்க்கரை நோய் வந்த பிறகு, நமது வாழ்க்கை முறையைச் சரியாக்கிக் கொள்ளத் தயாராக இருக்கிற நாம், அது வருவதற்கு முன்பு நமது வாழ்க்கைமுறையைச் சரிபடுத்திக்கொண்டு அந்த நோயைத் தடுக்க ஏன் தயாராக இல்லை?

ரத்தத்தில் அதிக அளவில் குளுகோஸ் சேரும்போது, அதை நீரிழிவு நோய் என்கிறோம். கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதில் மந்தமோ அல்லது சுரந்த இன்சுலின் உடலில் வேலை செய்வதில் மந்தமோ அல்லது இரண்டுமோ சேர்வதினால், இந்த நோய் வரக்கூடும். உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக சர்க்கரை நோயால் அவதிப்படுகிறார்கள்!

நீரிழிவு நோயின் அறிகுறிகள்:

அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகத் தாகம், அதிகப் பசி, உடல் எடை இழத்தல், அதிக சோர்வு, பார்வை மங்கல், அடிக்கடி நோய்க்கிருமிகள் தொற்றுவது, உடற்காயங்கள் மெதுவாக ஆறுவது மற்றும் உள்ளங்கை அல்லது பாதங்களில் மரத்துப்போதல் ஆகியவை

சர்க்கரை நோய் வருமுன் காப்பது எப்படி?
 
மேற்கண்ட நோய் அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால், உடனே மருத்துவரைப் பார்ப்பது நல்லது. சிலர் இந்த அறிகுறிகள் இல்லாமலேகூட இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த நோய் வராமல் தடுப்பதிலும் அல்லது வந்தபின் உடலைப் பாதுகாப்பதற்கும் தொடர்ந்து உடல் பரிசோதனை செய்துகொள்வது சிறந்தது!

காரணங்கள்

45 வயதைத் தாண்டுவது, அதிக உடல் எடை (குறிப்பாக இடுப்பைச் சுற்றி), பரம்பரையாக இந்நோய் இருப்பது, அதிக ரத்த அழுத்தம் (140/90 அல்லது அதற்கும் மேல் இருப்பது), அதிகக் கொழுப்பு, உடற்பயிற்சி இல்லாமை, ஊட்டச்சத்து இல்லாத உணவு, மன அழுத்தம் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது போன்றவை இந்நோய்க்கான சில காரணங்களாக இருக்கின்றன.

பல நோய்களுக்கு ஒரு காரணமாக இருக்கும் மன அழுத்தம் (stress) நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோய்க்கான அறிகுறிகள் பற்றியும் இந்த நோய் வரக்கூடிய காரணங்கள் பற்றித் தெரியாமல் இருப்பதுவும் அதிகமானோர் இந்த நோயைப் பெறக் காரணமாக இருக்கிறது. ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கையாள்வதாலும் நோய் பற்றிய விழிப்புணர்வாலும் இந்நோயை நாம் நிச்சயமாகத் தடுக்க முடியும்!

சர்க்கரை நோய்க்கு என்ன உணவு சாப்பிடலாம்:

மேற்கண்ட காரணங்களில் பலவற்றை நாம் சரிசெய்து கொள்ள முடியும். நாம் உண்ணும் உணவில் கவனம் எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவை இந்நோய் வராமல் தடுப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். உடற்பயிற்சி கொழுப்பைக் கரைத்து சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது மற்றும் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது ஆங்கில மருத்துவம் இந்த நோயை, உடலில் உள்ள குறையாகவே பார்க்கிறது. எனவே உடற்குறைக்கான தீர்வுகளையே அம்மருத்துவம் நாடுகிறது. ஆயுர்வேதத்தில், நீரிழிவு கபம் சம்பந்தப்பட்ட நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கபம் சம்பந்தப்பட்ட நோய்களில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். ஜீரண சக்தி குறைவாக இருக்கும்போது அதிக அளவிலான சர்க்கரை ரத்தத்தில் தேங்கிவிடுகிறது. ஆயுர்வேதாவில் மூலிகைச் சிகிச்சையாக மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர். தினமும் மஞ்சள் எடுத்துக் கொள்வது சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. மேலும் தினமும் வேப்ப உருண்டை சாப்பிடுவது இன்சுலின் சுரப்பதை அதிகமாக்குகிறது.

நோய்கள் பற்றிய யோகாவின் கருத்து ஆஸ்த்மா, நீரிழிவு, ரத்த அழுத்தம், படபடப்பு போன்றவை ஆதிஜ வியாதிகள் என்றும் நோய்க்கிருமிகள் மற்றும் காயங்கள் ஆகியவை ஆனந்திஜ வியாதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆனந்திஜ வியாதிகளுக்கு உடலளவில் சிகிச்சை தேவைப்படுகிறது. அதிக வியாதிகளுக்கு உடலின் 5 அடுக்குகளில் ஒன்றான மனோமய கோஷாவில் ஏற்படும் பாதிப்பு அதாவது உணர்ச்சிகளால் ஏற்படும் மனப் பாதிப்புகளும் ஒரு காரணம். மனோமய கோஷாவில் ஏற்படும் பாதிப்புகள் சரியாகாதபோது, பிராணமய கோஷாவில் சமநிலையற்ற தன்மை ஏற்படுகிறது. அதன் காரணமாக வரும் அழுத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உடலில் நோய்களாக வருகின்றன. இந்த நோய்களுக்கு பலவகைக் காரணங்கள் இருப்பதால், உடலளவில் ஏற்படும் அறிகுறிகளுக்கு மட்டும் சிகிச்சை தருவது முழுமையான பயனைத் தராது. யோகா வெளிப்படையாகவும் மற்றும் சூட்சுமமாகவும் வேலை செய்கிறது. யோகா உடலின் 5 அடுக்குகளையும் சமநிலைப்படுத்துவதால் முழு நலன் கிடைக்கிறது. தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் உடலின் இயல்பான தன்மையைத் தூண்டிவிடுவதுதான் யோகாவின் வழியாக இருக்கிறது!

யோகா எப்படி வேலை செய்கிறது?

தினமும் யோகப் பயிற்சி செய்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம், உடல் எடை, மற்றும் நோய் முற்றுவது ஆகியவை குறைகின்றன. நோய் அறிகுறிகளும் வேகமாகக் குறைந்துவிடுகின்றன. மன அழுத்தம் வேகமாகக் குறைவதால் இன்சுலின் நன்கு வேலை செய்கிறது. மேலும் அழுத்தத்தினால் ஏற்படும் ஹார்மோன் சுரப்புகளும் குறைவதால் இன்சுலின் செயல்பாட்டில் முன்னேற்றம் கிடைக்கிறது.

மன அழுத்தம் குறைந்து மன அளவில் சமநிலை ஏற்படுவதால், ஒருவரின் நடத்தை நிலையிலும் மாற்றம் தெரிகிறது. ஆசனப் பயிற்சிகள் மற்றும் மூச்சுப் பயிற்சிகளின்போது வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிவதால், கணையம் இன்சுலினை சுரப்பது அதிகமாகிறது. பயிற்சிகளின்போது தசைநார்கள் அதிக அளவில் குளுகோஸை எடுத்துக்கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதுடன், ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு ஆகியவையும் வேகமாகக் குறைகிறது. கணையத்தின் சுரப்பு தானியங்கி நரம்பு மண்டலங்களால் நிர்வகிக்கப்படுகிறது.

யோகப் பயிற்சிகள் தானியங்கி நரம்பு மண்டலத்தைச் சமநிலைப்படுத்துவதால் நோயை நிர்வகிப்பது எளிதாகிறது. உடலில் உள்ள 5 பிராண சக்திகளில் வியானப் பிராணாவும் ஒன்று. யோகப் பயிற்சிகள் காரணமாக வியானப் பிராணாவின் இயக்கம் சீராகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் காயம் ஏற்படும்போது இந்த சீரான இயக்கம் காரணமாக காயங்கள் விரைவில் 

நன்றி ஈஷாவுக்கு! 

2005ல் என் 42 வயதாவது வயதில், எனக்கு நீரிழிவு நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. என் ரத்தத்தில் குளுகோஸ் அளவு அதிகமாக இருந்ததால், 2 விதமான மாத்திரை எடுக்க வேண்டியிருந்தது. எனக்கு மிகுந்த மன உளைச்சலை இது ஏற்படுத்தியது. பிறகு யோகா பற்றி கேள்விப்பட்டு ஈஷாவில் யோகப் பயிற்சி எடுத்துக்கொண்டேன். அங்கு கற்றுத்தரப்பட்ட ஆசனம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தேன். 2 வருடங்களில் என்னுடைய சர்க்கரை அளவு படிப்படியாகக் குறைந்து இப்போது நல்ல கட்டுப்பாட்டில் இருக்கிறது. இப்போது நான் ஒரு மாத்திரை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன். என்னால் முன்பு போல் சுறுசுறுப்பாகவும் மன உளைச்சல் இல்லாமலும் என் வாழ்க்கையை தொடர்ந்து நடத்தி வர முடிகிறது! 

திரு. வசந்த், மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com