லைஃப்ஸ்டைல் நோய்களுக்கு டாட்டா சொல்லனும்னு ஆசையா இருக்கா?

லைஃப்ஸ்டைல் நோய்கள் என்பவை வேறொன்றும் இல்லை, அவை நாம் வாழும் முறைமையின் அடிப்படையில் நமக்கு வரக்கூடிய நோய்களே. தினமும் நாம் என்ன சாப்பிடுகிறோம்?, அதை எப்படிச் சாப்பிடுகிறோம்?
லைஃப்ஸ்டைல் நோய்களுக்கு டாட்டா சொல்லனும்னு ஆசையா இருக்கா?

லைஃப்ஸ்டைல் நோய்கள் என்பவை வேறொன்றும் இல்லை, அவை நாம் வாழும் முறைமையின் அடிப்படையில் நமக்கு வரக்கூடிய நோய்களே. தினமும் நாம் என்ன சாப்பிடுகிறோம்?, அதை எப்படிச் சாப்பிடுகிறோம்? சாப்பிட்ட உணவு செரிக்க என்ன செய்கிறோம்? எத்தனை மணி நேரம் ஓய்வெடுக்கிறோம்? சாப்பிட்டு, தூங்கி, உழைத்து, அவரவர் ஆர்வத்துக்கு ஏற்ப பொழுதுபோக்கி இப்படி நாம் வாழும் வாழ்வில் மேற்கண்ட அடிப்படை விசயங்களில் நாம் பின்பற்றும் சில அசாதாரண மாற்றங்களால் வரக்கூடியவையே லைஃப்ஸ்டைல் நோய்கள்.

உதாரணத்துக்கு ஒபிஸிட்டியை (உடல் பருமன் நோய்) எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நோய் வரப் பெரும்பான்மையான காரணமே... அதிகப்படியான நொறுக்குத் தீனிகள் உண்ணும் வழக்கம் தான். சிலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டே எவ்வளவு உண்கிறோம் என்ற அளவே இல்லாமல் நிறைய உருளை சிப்ஸ், ஆலூ பூஜா, நேந்திரம் சிப்ஸ், கடலை, எள்ளு மிட்டாய்கள், முறுக்குகள் என்று நொறுக்கித் தள்ளுவார்கள். சரி அப்படி உண்ட பிறகாவது ஏதாவது வேலை செய்து உண்ட நொறுக்குத் தீனிகளை ஜீரணம் செய்வார்களா? என்றால் அதுவும் இல்லை. சாப்பிட்டு, சாப்பிட்டு அப்படியே ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன ஆகும்? இந்த நொறுக்குத் தீனிகள் எல்லாம் கொழுப்பாக மாறி திசுக்களில் போய் சேகரம் ஆகி ஒபிஸிட்டிக்கு வழி வகுக்கும்.

இந்த ஒபிஸிட்டி என்பது உடல் உழைப்பே இல்லாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சி சீரியல்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் தான் வரும் என்பதில்லை. காலை முதல் மாலை வரை ஒரே இடத்தில் உட்கார்ந்தவாறு வேலை பார்ப்பவர்களும் கூட அதிக அளவில் ஒபிஸிட்டியால் பாதிக்கப் பட வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் மூளைக்கு வேலை கொடுப்பதால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையும் என்று எதிர்பார்க்க முடியாது. அதுமட்டுமல்ல ஒபிஸிட்டி மட்டுமே லைஃப்ஸ்டைல் நோய் அல்ல. இந்த ஒபிஸிட்டியில் தொடங்கி அடுத்ததாக முறையற்ற ஜங்க் வகை உணவுகளை தொடர்ந்து உண்ணும் வழக்கமிருந்தால் நாளடைவில் கேன்சர் வர வாய்ப்புகள் உண்டு. ஆக, கேன்சர், ஹார்ட் அட்டாக் எல்லாவற்றுக்குமான திறவு கோலாக இந்த ஒபிஸிட்டி செயல்படக் கூடிய வாய்ப்பு அமைந்து விடுகிறது. 

இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

  • முறையான உணவுப் பழக்கம்
  • தேவையான உடற்பயிற்சி
  • தேவையான அளவு தூக்கம்

இந்த மூன்று விசயங்களையும் நாள் தவறாமல் கவனமாக, முறையாகப் பேணினாலே போதும் லைஃப் ஸ்டைல் நோய்கள் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஒபிஸிட்டி வராமல் இருக்க வேண்டுமானால் முதலில் கடைகளில் வாங்கக் கூடிய நொறுக்குத்தீனிகள், பீட்ஸா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா போன்ற ஜங்க் வகை உணவுப் பொருட்கள் உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். அப்படியே தவிர்க்க முடியாமல் சில நேரங்களில் உண்டு விட்டாலும் அதிக கலோரிகள் கொண்ட அந்த உணவுகளில் இருக்கும் கொழுப்பை கரைக்கும் விதமாக மிதமான நடைப்பயிற்சியோ அல்லது எளிமையான உடற்பயிற்களோ எதையாவது ஒன்றைத் தவறாமல் செய்யும் வழக்கத்தையும் தவறாமல் கடைபிடியுங்கள். இவை இரண்டும் தவிர தினமும் போதுமான அளவுக்கு தூக்கத்தைப் பேணுகிறோமா? என்பதிலும் தவறாமல் கவனம் செலுத்த வேண்டும். இந்த மூன்று விசயங்களையும் நாம் தவறாமல் கடைபிடித்தால் போதும் லைஃப்ஸ்டைல் நோய்களுக்கு நாம் எளிதாக டாட்டா காட்டி விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com