காஸ்ட்ரிக் பலூன் சர்ஜரி எடையைக் குறைக்கவா? உயிரைப் போக்கவா?

எடை குறைப்பில் ஈடுபட நினைப்பவர்கள் அறுவை சிகிச்சை போன்ற கடின முயற்சிகளில் இறங்காமல் டயட், உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் என அவரவருக்கு ஏதுவான ஏதாவது ஒரு எளிய பயிற்சியை மேற்கொள்வதே
காஸ்ட்ரிக் பலூன் சர்ஜரி எடையைக் குறைக்கவா? உயிரைப் போக்கவா?

இதுவும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை முறைகளில் ஒன்றே! எடை குறைப்பு தொழில்நுட்பங்களில் ஒன்றான இதில், எண்டோஸ்கோபி முறையில் சிலிகானால் ஆன சிறிய காஸ்ட்ரிக் பலூன் சிகிச்சை எடுத்துக் கொள்பவரின் வயிற்றினுள் செலுத்தப்படும். சிகிச்சையளிக்கும் மருத்துவர் இந்த பலூனை சலை வாட்டர் கொண்டு நிரப்புவார். இப்படி நிரப்பப் படுவதால் உணவுண்ணும் போது,வயிறு நிறைந்திருக்கும் உணர்வு சீக்கிரமே ஏற்பட்டு விடும். இதனால் அளவுக்கு அதிகமாக உண்ணும் வழக்கம் தடை படும். தொடர்ந்து இப்படி அளவு மீறி உண்ணும் வழக்கம் குறையும் போது தன்னியல்பாக எடை குறையும் சாத்தியக் கூறுகள் உண்டு.

சமீபத்தில் மறைந்த பிரபல தெலுங்கு தயாரிப்பாளாரான தாசரி நாராயண ராவுக்கு எடை குறைப்பு மற்றும் ஆரோக்கியத்துக்காக ‘காஸ்ட்ரிக் பலூன் அறுவை சிகிச்சை இருமுறை செய்யப்பட்டுள்ளது. முதல் முறை செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் போது அவர் நலமாகவே மீண்டு வந்துள்ளார். ஆனால் இரண்டாம் முறை அதே அறுவை சிகிச்சை எதற்காகச் செய்தார்கள் எனத் தெரியவில்லை. முதல்முறை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய அறுவை சிகிச்சை நிபுணர் கிடைக்காத போதிலும் இரண்டாம் முறையும் அவர் இந்த அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டதாக அவரது மகள் தெரிவித்துள்ளார். இரண்டாம் முறை இந்த அறுவை சிகிச்சை முடிந்து சில மாதங்களுக்குள் ஆரோக்கியமாகவே காட்சியளித்த அவர் திடீரென உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு மறைந்து விட்டார்.

லிப்போ சக்ஸன் முறையில் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு உயிரிழந்த நடிகை ஆர்த்தி அகர்வால், எகிப்திலிருந்து எடை குறைப்பு சிகிச்சைக்கு இந்தியா வந்து இந்திய மருத்துவரை குற்றம் சாட்டி விடைபெற்ற உலகின் அதிக எடை கொண்ட பெண்ணான இமான் அஹமது, இப்போது தாசரி நாராயண ராவ் என நாமறிந்த உதாரணங்கள் அனைத்துமே எடை குறைப்பு அறுவை சிகிச்சைகளை எண்ணி அச்சமூட்டக் கூடிய அனுபவங்களாகவே இருக்கின்றன.

எடை குறைப்பில் ஈடுபட நினைப்பவர்கள் அறுவை சிகிச்சை போன்ற கடின முயற்சிகளில் இறங்காமல் டயட், உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் என அவரவருக்கு ஏதுவான ஏதாவது ஒரு எளிய பயிற்சியை மேற்கொள்வதே சாலச் சிறந்ததாக இருக்கக் கூடும் என்றெண்ண வேண்டியதாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com