பாதி எலுமிச்சை பழத்தை படுக்கை அறையில் வைத்தால் என்ன ஆகும்?

எலுமிச்சை பழத்தின் பாதியைப் படுக்கை அறையில் வைப்பதால் பல நன்மைகள் உண்டாகும்
பாதி எலுமிச்சை பழத்தை படுக்கை அறையில் வைத்தால் என்ன ஆகும்?

எலுமிச்சை பழத்தின் பாதியைப் படுக்கை அறையில் வைப்பதால் பல நன்மைகள் உண்டாகும். அவை:

  • படுக்கை அறையில் உறங்கும்போது எலுமிச்சையின் நறுமணம் சுவாசத்துடன் மார்புக்குள் செல்வதால், சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
  • நினைவுத்திறன் அதிகரிப்பதோடு, மனம், மூளையின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஜப்பானிய விஞ்ஞானிகள் கருத்து.
  • எலுமிச்சை, நோய்த்தொற்றுக்களை அழிக்கும் தன்மைக் கொண்டது. இதை படுக்கை அறையில் வைப்பதால், கிருமிகளை அழிக்கிறது.
  • உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உறங்கும் அறையில் எலுமிச்சையை வெட்டி வைத்தால் அதன் வாசனை ரத்த அழுத்த பிரச்னையை சரி செய்ய உதவும்.
  • எலுமிச்சையை இரண்டாக வெட்டி அதில் கிராம்பை குத்தி வைத்து, அதை படுக்கும் அறையில், சமையல் அறையில் வைத்தால், வீட்டில் எறும்புகள், கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் தொல்லைகள் இல்லாமல் இருக்கும்.

- கண்ணம்மா பாரதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com