ஸ்டான்லி மருத்துவமனை: தாமதமில்லா சிகிச்சைப் பிரிவில் கூடுதல் படுக்கைகள்

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள காலதாமதமில்லா அறுவை சிகிச்சைப் பிரிவில் கூடுதலாக 25 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட, தாமதமில்லாத அறுவைச் சிகிச்சை பிரிவை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பார்வையிடும் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட, தாமதமில்லாத அறுவைச் சிகிச்சை பிரிவை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பார்வையிடும் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார்

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள காலதாமதமில்லா அறுவை சிகிச்சைப் பிரிவில் கூடுதலாக 25 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.55.5 லட்சம் செலவில் கூடுதல் படுக்கைகளுடன் புதுப்பிக்கப்பட்ட வார்டு, அலங்கார நுழைவு வாயில் ஆகியவற்றை நிதியமைச்சர் பா.ஜெயக்குமார், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் உள்ள இந்த காலதாமதமில்லா அறுவைச் சிகிச்சை வார்டுக்கு (Zero delay surgical ward)   கொண்டு வரப்படும் முன்பே தகவல் தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் நோயாளிக்கு தேவையான அவசர முதலுதவிகளை எவ்வித தாமதமும் இன்றி மேற்கொள்ள முடியும்.
இந்த அறுவைச் சிகிச்சை வார்டானது 24 மணி நேரமும் செயல்படும். ஏற்கெனவே 15 படுக்கைகளுடன் செயல்பட்ட இந்த வார்டு தற்போது 40 படுக்கைகளாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வார்டில் குளிர்சாதனை வசதியுடன்கூடிய நவீன படுக்கை வசதி, செயற்கை சுவாசக் கருவிகள், அருகிலேயே எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் என அனைத்தும் உள்ளன.
இந்த வார்டில் உள்ள மருத்துவக் குழுவில் பொது அறுவைச் சிகிச்சை நிபுணர், எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் மற்றும் தலைக்காய சிகிச்சை, நரம்பியல் நிபுணர்கள் ஆகியோர் 24 மணி நேரமும் பணியில் இருப்பர் என்று மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, கல்லூரி மருத்துவமனை முதல்வர் பொன்னம்பலம் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com