உடல் பருமனால் ஆபத்து! அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோய்த் தொற்று அபாயம்!

பை பாஸ் சர்ஜரி முடித்த நோயாளிகள் உடல் பருவமனாகவும் உள்ள நிலையில் அவர்களுக்கு
உடல் பருமனால் ஆபத்து! அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோய்த் தொற்று அபாயம்!

பை பாஸ் சர்ஜரி முடித்த நோயாளிகள் உடல் பருவமனாகவும் உள்ள நிலையில் அவர்களுக்கு ஆபரேஷன் முடிந்த 30 நாட்களில் நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக புதிய ஆய்வொன்று கூறுகிறது.

நார்மல் பி எம் ஐ (BMI) எடையுள்ள நோயாளிகளை விட பி எம் ஐ 30 விட அதிகமிருப்பவர்களுக்கு 1.9 தடவை அறுவை சிகிச்சைக்குப் பின் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக கனடாவிலுள்ள அல்பர்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் டஸுகு டெராடா கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், ‘உடல் பருமன் மற்றும் இதய நோய் மருத்துவத்தை மேம்படுத்துவதற்கு மேலும் சிறந்த மருத்துவ ஆய்வுகள் தேவை’ என்று பதிவு செய்தார்.

பி எம் ஐ மற்றும் கரோனரி ஆர்டெரி பைபாஸ் க்ராஃப்டிங் (CABG) அறுவைசிகிச்சை மற்றும் பெர்க்யூடேனியஸ் கரோனரி இண்டெர்வென்ஷன் (பி.சி.ஐ.) (இது கொரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி எனவும் அறியப்படுகிறது) ஆகிய பல்வேறு நோய்களுக்கும் இடையேயான தொடர்புகளை ஆய்வு செய்ய 56,722 நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளை கனடியன் ஒபிஸிடி சம்மிட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.  

அறுவை சிகிச்சைக்குப் பிறகான நோய்த் தொற்று நோயாளிகள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலகட்டத்தை அதிகரித்துவிடுகிறது. இதனால் அவர்களுக்கு கூடுதல் மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன, தவிர மருத்துவ செலவுகள் மிகவும் அதிகரித்துவிடுகின்றன.

'அறுவை சிகிச்சைக்குப் பிறகு தகுந்த மருத்துவ பரிசோதனை செய்து வர இத்தகைய நோய்த் தொற்றுகளின் அபாயம் குறையும், தவிர நோயாளிகளும் தகுந்த கவனிப்பும் பெறுவார்கள்’ என்றார் அல்பர்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவி பேராசிரியர் மேரி ஃபோர்ஹன். 

'அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயன்படுத்தப்படும் செஸ்ட் பைண்டர்ஸ் (chest binders) சரியான அளவில் இருக்கிறதா, சரியாக வேலை செய்கிறதா என்பது மிகவும் முக்கியம். எங்களுடைய குழுவினர் அறுவை சிகிச்சைக்குப் பிறகான மருத்துவ கருவிகளை மறு ஆய்வு செய்வதிலும் புதிய கருவிகளை வடிவமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் பை பாஸ் சர்ஜரி முடிந்தபின் நோயாளிகள் எவ்வித தொற்று நோய்க்கும் ஆளாகாமல் இருப்பார்கள்' என்றார் ஃபோர்ஹன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com