17 லட்சம் பேருக்கு காசநோய்: மருத்துவ ஆண்டறிக்கையில் தகவல்

கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 17 லட்சம் பேருக்கு காசநோய் இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
17 லட்சம் பேருக்கு காசநோய்: மருத்துவ ஆண்டறிக்கையில் தகவல்

கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 17 லட்சம் பேருக்கு காசநோய் இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட காசநோய்த் தடுப்பு மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் இந்த விவரம் தெரியவந்துள்ளது. உலக காசநோய் தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி அதுதொடர்பான ஆண்டறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. காசநோய் தடுப்புக்காக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு பிரசாரங்கள், சிகிச்சைகள், நோய்த் தடுப்புத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
கடந்த ஆண்டு மட்டும் 17 லட்சம் பேருக்கு காசநோய் இருந்தது கண்டறியப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை குறைபாடு காரணமாக 33,820 பேருக்கு மீண்டும் காசநோய்த் தொற்று (எம்டிஆர்-டிபி) ஏற்பட்டதும் பரிசோதனையில் கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்டிஆர்-பிடி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கடந்த ஆண்டு புதிய மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், காசநோயை முற்றிலும் தடுப்பதற்கான நவீன மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com