'தொடர் சிகிச்சையில் காச நோய் குணமாகும்'

காச நோய்க்குத் தொடர்ந்து சிகிச்சை எடுத்தால் முழுமையான குணம் கிடைக்கும் என்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இயக்குநர் டாக்டர் ராஜேஷ் சந்திரன் கூறினார்.

காச நோய்க்குத் தொடர்ந்து சிகிச்சை எடுத்தால் முழுமையான குணம் கிடைக்கும் என்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இயக்குநர் டாக்டர் ராஜேஷ் சந்திரன் கூறினார்.
உலக காச நோய் விழிப்புணர்வு தினம் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை கடைப்பிடிப்பட்டது. இதை முன்னிட்டு, இந்தியன் வளர்ச்சி நிறுவனம் மற்றும் கிரிமால்டஸ் மருத்துவமனை சார்பில், காசநோய் விழிப்புணர்வுக் கண்காட்சி நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சியை டாக்டர் ராஜேஷ் சந்திரன் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
காச நோய் அறிகுறி உள்ளவர்கள் தொடர்ந்து 6 மாதம் சிகிச்சை எடுத்தால், முழுமையாகக் குணமாகி விடும். ஆனால், பலர் 2 மாதத்தில் சிகிச்சையைக் கைவிட்டு விடுவதால், மீண்டும் குணப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்றார் டாக்டர் ராஜேஷ் சந்திரன்.
இந்தியன் வளர்ச்சி நிறுவன மேலாளர் ஸ்ரீராம் பேசியது: இந்தியாவில் காசநோய் காரணமாக ஆண்டுதோறும் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.
காச நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனாலும், காசநோய் பாதிப்புத் தொடர்கிறது. காச நோய் பாதிப்பு ஏற்பட்டால் தொடர் சிகிச்சை எடுத்தால் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என்றார் ஸ்ரீராம்.
மாணவர்கள் பிரசாரம்: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காச நோய் தொடர்பான பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் இடம் பெற்றிருந்தன.
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து சென்ற பயணிகளிடம் ஸ்ரீ சாந்தி ஆனந்த் வித்யாலய பள்ளி மாணவர்கள் விழிப்புணவு பிரசாரம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com