தமிழக மருத்துவர்கள் 6 பேருக்கு தேசிய விருது

மருத்துவத் துறையில் சிறப்பாக சேவையாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த மற்றும் தமிழகத்தில் பணியாற்றி வரும் ஆறு மருத்துவர்கள்,
தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விருது பெறும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள்
தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விருது பெறும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள்

மருத்துவத் துறையில் சிறப்பாக சேவையாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த மற்றும் தமிழகத்தில் பணியாற்றி வரும் ஆறு மருத்துவர்கள், புதுச்சேரி மருத்துவர் ஒருவர் உள்பட 53 பேருக்கு தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார்.
மருத்துவத் துறையில் சிறப்பாக சேவையாற்றி வரும் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோருக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில் 'பி.சி.ராய் தேசிய விருது', 'ஹரி ஓம் ஆஷ்ரம் அலெம்பிக் ஆராய்ச்சி விருது' வழங்கப்பட்டு வருகிறது.
தலைசிறந்த மருத்துவ சேவை, தலைசிறந்த மருத்துவ ஆசிரியர், மருத்துவத் துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்த திறன் ஆராய்ச்சிக்கு அங்கீகாரம், சமூக மருத்துவ நிவாரணம், மருத்துவ ஆராய்ச்சிக்கு உதவி ஆகிய பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.


இதையொட்டி, 2014, 2015, 2016-ஆம் ஆண்டுகளுக்கான பி.சி.ராய் தேசிய விருதுகள், 2008-ஆம் ஆண்டுக்கான ஹரி ஓம் ஆஷ்ரம் அலெம்பிக் ஆராய்ச்சி விருது வழங்கும் நிகழ்வு தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு விருதுகளை வழங்கி பாராட்டினார்.
சமூக மருத்துவ நிவாரண உதவிப் பிரிவில் தில்லி குளோபல் மெடிக்கல் நிறுவனத் துணைத் தலைவர் டி.ராஜகோபால் (2016); சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எஸ். கீதாலக்ஷ்மி (2016); தலைசிறந்த மருத்துவ நிபுணர் பிரிவில் கோவை ஜெம் மருத்துவமனைத் தலைவரும் இரைப்பை குடலியல், லேப்ராஸ்கோப்பி சிகிச்சை நிபுணருமான டாக்டர் சி. பழனிவேலு (2015); தலைசிறந்த மருத்துவ ஆசிரியராக விளங்கி வருவதற்காக சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி அறுவை சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் என்.சஞ்சீவ ரெட்டி (2015); புதுச்சேரி அரசு சுகாதாரம் குடும்ப நலத் துறையில் பணியாற்றி வரும் தலைமை மருத்துவ அதிகாரி ஏ.அருள்வாசிகன் (2015) ஆகியோருக்கு பி.சி.ராய் விருது வழங்கப்பட்டது.


ஆராய்ச்சி விருது: ஆர்த்தோ சிகிச்சையில் ஆய்வு செய்ததை அங்கீகரிக்கும் வகையில் கோவை கங்கா மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் எஸ். ராஜசேகரன் (2008), மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் அரவிந்த் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையில் பணியாற்றி வரும் மூலக்கூறு மரபியல் (மாலிக்யூலர் ஜெனடிக்ஸ்) மூத்த விஞ்ஞானி டாக்டர் பி. சுந்தரேசன் (2010) ஆகியோருக்கு 'ஹரி ஓம் ஆஷ்ரம் அலெம்பிக் ஆராய்ச்சி' விருது வழங்கப்பட்டது. இவர்கள் உள்பட மொத்தம் 53 பேருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
மருத்துவத் துறையின் பல்வேறு பிரிவுகளில் நவீன சிகிச்சையை புகுத்துவதில் சிறப்பாக செயல்படுவதற்காக குர்கான் மெதாந்தா மெடிசிட்டி தலைவரும் நீரிழிவு சிகிச்சை நிபுணருமான டாக்டர் அம்பரிஷ் மித்தல்; எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஆர்த்தோபிளாஸ்டி வகுப்பு எடுக்கும் மூட்டு, இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சந்திர சேகர யாதவ்; ஓடிஸா மாநிலம், கட்டாக்கில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அக்ஷய குமார் பிúஸாய்; கேரளத்தைச் சேர்ந்த அரசு மருத்துவமனை மருத்துவரும் நரம்பியல் நிபுணருமான ஏ.மார்த்தாண்ட பிள்ளை உள்ளிட்டோரும் விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தகவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com