'தொழுநோயாளிகளைப் பாதுகாக்கும் சட்ட முன்வரவை நடைமுறைப்படுத்த வேண்டும்'

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கும் சட்ட முன்வரைவை (256), சட்டமாக்கி நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய தொழுநோய் ஆராய்ச்சி

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கும் சட்ட முன்வரைவை (256), சட்டமாக்கி நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய தொழுநோய் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் செளகத் அலி கூறினார்.
சென்னையை அடுத்த முட்டுக்காடு, தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவனத்தில் சனிக்கிழமை நிறைவு பெற்ற கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் அவர்களை எவ்வித உடல் ஊனப்பாதிப்பும் இல்லாமல் குணமாக்க முடியும் என்றார் அவர்.
மத்திய அரசால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் குறித்தும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் டீனா மெண்டிஸ், நிகிதா சாரா, தமிழ்நாடு கிளை மேலாளர் ராம் கே.ராபர்ட், முட்டுக்காடு தேசிய ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோர் மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் டாக்டர் ஹிமான்ஸ் தாஸ், பதிவாளர் சங்கரநாராயணன், சமூகநலத் துறை இயக்குனர் அமர்நாத், வழக்கறிஞர் சீமா, டிசம்பர் -3 இயக்க மாநிலத் தலைவர் தீபக் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com