பீட்ரூட் ஜூஸ் குடிங்க! ஹார்ட் அட்டாக்கை தடுத்துடுங்க!

சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றில் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதினால் உயர் ரத்த அழுத்த
பீட்ரூட் ஜூஸ் குடிங்க! ஹார்ட் அட்டாக்கை தடுத்துடுங்க!

சமீபத்தில் நடத்திய ஆய்வொன்று பீட்ரூட் ஜூஸ் அடிக்கடி குடிப்பதினால் உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கள் மற்றும் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் குறையும் என்கிறது. காரணம் பீட்ரூட்டில் இயற்கையாக உள்ள டயட்டரி நைட்ரேட் ரத்தக் குழாயில் உள்ள அழுத்தங்களை ஒழுங்கமைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும் என்கிறது இந்த ஆய்வு.

ஜர்னல் ஆஃப் பிஸியாலஜி - ஹார்ட் அண்ட் சர்க்குலேட்டரி பிஸியாலஜி (Journal of Physiology - Heart and Circulatory Physiology)என்ற பத்திரிகையில் இந்த ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பீட்ரூட் ஜூஸ் நரம்பு மண்டலங்களில் நுட்பமாக செயல்பட்டு ஹார்ட் அட்டாக் வருவதற்கான அடிப்படை காரணிகளை தடுத்து இதயத் துடிப்பை சீராக்கிவிடும் என்கிறது.

கனடாவில் உள்ள யூனிவர்சிட்டி ஆஃப் கெல்ஃப் ஆராய்ச்சியாளர்கள் express.co.uk எனும் இணையதளத்தில் இது குறுத்து கூறும் போது, ‘பீட்ரூட் ஜூஸில் கிடைக்கப்பெறும் அதிகப்படியான நைட்ரேட் உடற்பயிற்சி செய்யும் போது அல்லது ஓய்வாக இருக்கும் போதும் கூட தசைகளுக்கு புத்துணர்வை ஊட்டும்’என்றார்கள்.

இந்த ஆராய்ச்சிக்காக 27 வயதுடைய 20 இளம் தன்னார்வலர்களை உட்படுத்தினார்கள். இவர்களிடம் இரண்டு கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கு நைட்ரேட் அல்லது ப்ளாசிபோ (placebo) சப்ளிமெண்ட் உடைய ஜூஸ்கள் தரப்பட்டன.

அவர்களுடைய ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு குறிக்கப்பட்டது. இது தவிர அவர்கள் ஓய்வில் இருக்கும் போது மற்றும் கைகளுக்கான பயிற்சியை மேற்கொள்ளும் போதும் எம்எஸ்என்ஏ (muscle sympathetic nerve activity (MSNA)) என்ற பரிசோதனையையும் ஆராய்ச்சியாளர்கள் செய்தனர்.

இந்த ஆராய்ச்சி முடிவில் ப்ளாசிபோ எடுத்துக் கொண்டவர்களைவிட பீட்ரூட் ஜூஸ் குடித்த தன்னார்வலர்களுக்கு MSNA குறைவாக இருந்தது. ரத்த அழுத்தத்தைப் பொருத்தவரையில் ஓய்வாக இருக்கும் போதும் பயிற்சி செய்யும் போதும் பெரிய வித்தியாசங்கள் காணப்படவில்லை. அது சீராகவே இருந்தது என்றார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
 
இதிலிருந்து டயட்டரி நைட்ரேட் சப்ளிமெண்ட் உடலினுள் செயல்படும் விதத்தைப் புரிந்து கொண்டு அது கார்டியோ வாஸ்குலர் பிரச்னைகளை சீராக்குகிறது என்ற முடிவுக்கு வரலாம் என்று குறிப்பிட்டனர்.

இதற்கு முன்னால் யூனிவர்சிட்டி ஆஃப் எக்ஸிடர் (University of Exeter) வெளியிட்டுள்ள ஆய்வில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் 16 சதவிகிதம் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்ய முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com