தொற்றுநோய்கள் கட்டுப்பாட்டில் உள்ளன: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் அனைத்துத் தொற்றுநோய்களும் கட்டுப்பாட்டில் உள்ளன என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
தொற்றுநோய்கள் கட்டுப்பாட்டில் உள்ளன: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் அனைத்துத் தொற்றுநோய்களும் கட்டுப்பாட்டில் உள்ளன என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
தமிழக பொது சுகாதாரத் துறை சார்பில் தேசிய டெங்கு விழிப்புணர்வு தினம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்த சுத்தம் சுகம் தரும் என்ற குறும்படம் வெளியிடப்பட்டது
அப்போது அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது: தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட அனைத்துத் தொற்றுநோய்களும் கட்டுப்பாட்டில் உள்ளன. தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயாராக உள்ளன.
தென்னாப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கானோரைப் பாதித்த எபோலா நோய் கூட, தமிழகத்தில் பரவாமல் தடுக்கப்பட்டது. டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வுக்காக வெளியிடப்பட்டுள்ள 'சுத்தம் சுகம்' என்ற குறும்படம் அனைத்துத் திரையரங்குகளிலும் வெளியிடப்படும் என்றார்.
சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது: உலகத்தில் 125 நாடுகளில் டெங்கு பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் 2012-இல் டெங்கு பாதிப்பு அதிகமாகக் காணப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் தாக்கம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com