ஆஸ்துமா சிகிச்சைக்காக 1 லட்சம் மீன்கள் ஏற்பாடு: தெலங்கானா அரசு உத்தரவு

ஹைதராபாதில் ஆஸ்துமா நோய்க்கு மீன் மருந்து சிகிச்சை அளிக்கும் நிகழ்ச்சி, அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெறவிருப்பதையொட்டி, சுமார் 1 லட்சம் மீன்களை தயார்நிலையில்
ஆஸ்துமா சிகிச்சைக்காக 1 லட்சம் மீன்கள் ஏற்பாடு: தெலங்கானா அரசு உத்தரவு

ஹைதராபாதில் ஆஸ்துமா நோய்க்கு மீன் மருந்து சிகிச்சை அளிக்கும் நிகழ்ச்சி, அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெறவிருப்பதையொட்டி, சுமார் 1 லட்சம் மீன்களை தயார்நிலையில் வைக்கும்படி கால்நடைத் துறை அதிகாரிகளுக்கு தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹைதராபாதைச் சேர்ந்த பாதினி கௌடு குடும்பத்தார் சார்பில், அங்கு ஆண்டுதோறும் மீன் மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. உயிருள்ள சிறிய மீனின் வாயில் வைத்து தரப்படும் அந்த மூலிகை மருந்தை சாப்பிட்டால், ஆஸ்துமா நோய் குணமாகும் என்ற நம்பிக்கை நீண்ட காலமாக நிலவுகிறது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

நிகழாண்டு மீன் மருந்து வழங்கும் நிகழ்ச்சி, ஹைதராபாதின் நம்பள்ளி பகுதியில் உள்ள கண்காட்சி மைதானத்தில் அடுத்த மாதம் 8-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து, தெலங்கானா மாநில கால்நடைத் துறை அதிகாரிகளுடன் அந்த துறையின் அமைச்சர் ஸ்ரீநிவாஸ் யாதவ் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது, மீன் மருந்து வழங்கும் நிகழ்ச்சிக்காக சுமார் 1 லட்சம் மீன்களை தயார் நிலையில் வைக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும், வெளியூர்களில் இருந்து வருவோரின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்கவும் மாநில சாலை போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் மீன் மருந்து மீது பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை இருந்தபோதிலும், அதற்கு ஆஸ்துமாவை குணப்படுத்தும் திறன் உள்ளதா? என்று பகுத்தறிவுவாதிகள் சிலர் கேள்வியெழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com