மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி பெற உதவும் 'மிலாப்'

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் மருத்துவ சிகிச்சைகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கு உதவும் வகையில் 'மிலாப்' என்ற கூட்டு நிதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட (இடமிருந்து) மிலாப் அமைப்பின் இணை நிறுவனர் அனோஜ் விஸ்வநாதன், டாக்டர் ரேவதி ராஜ், டாக்டர் பிரியா ராமச்சந்திரன்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட (இடமிருந்து) மிலாப் அமைப்பின் இணை நிறுவனர் அனோஜ் விஸ்வநாதன், டாக்டர் ரேவதி ராஜ், டாக்டர் பிரியா ராமச்சந்திரன்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் மருத்துவ சிகிச்சைகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கு உதவும் வகையில் 'மிலாப்' என்ற கூட்டு நிதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மருத்துவ சிகிச்சை, குழந்தைகள், பெண்கள், கல்வி, விலங்குகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிதியுதவி தேவைப்படுவோருக்கு நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி திரட்டித் தரப்படும்.
இது தொடர்பாக 'மிலாப்' அமைப்பின் இணை நிறுவனர் அனோஜ் விஸ்வநாதன் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
இந்த இணையதளத்தின் மூலம் இதுவரை ரூ.160 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. சுமார் 80,000 திட்டங்களுக்கு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் நாடு முழுவதும் 3,000 பேருக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 350 பேருக்கு சுமார் ரூ.10 கோடி அளவுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.
இதற்காக 45 நகரங்களில் உள்ள 100 மருத்துவர்களிடம் தொடர்பு வைத்துள்ளோம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு நிதி திரட்டப்படும். மேலும் நன்கொடை அளிக்க விரும்புவோர் மருத்துவனையில் அளிக்கப்படும் ரசீதுக்கு நேரடியாகவே பணம் செலுத்த முடியும். எந்த நோயாளிக்கு நன்கொடை அளிக்கப்படுகிறதோ, அது தொடர்பான உண்மைத்தன்மையை சிகிச்சை அளிக்கும் மருத்துவரையே நேரடியாகத் தொடர்பு கொண்டு அறிய முடியும்.
ஒரே நபருக்கு சிறிய தொகையாக பலர் இணைந்து உதவி செய்யவும் முடியும். இதன் மூலம் புற்றுநோய், தலசீமியா, உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள், அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டணம் என அனைத்து வகையான தேவைகளுக்கு உதவி அளிக்க முடியும் என்றார்.
அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தைகள் புற்றுநோய் நிபுணர் ரேவதி ராஜ், காஞ்சி காமகோடி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் பிரியா ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com