எண்ணூர் முதல் முட்டுக்காடு வரையிலான கால்வாயைத் தூர்வாருவது அவசியம்: மு.க.ஸ்டாலின்

எண்ணூர் முதல் முட்டுக்காடு வரையிலான 49 கிலோ மீட்டர் கால்வாயைத் தூர் வார வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க ஓடைகளைப் பார்வையிட்ட எதிர்க்கட்சித் தலைவரும் பேரவை உறுப்பினருமான மு.க.ஸ்டாலின்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க ஓடைகளைப் பார்வையிட்ட எதிர்க்கட்சித் தலைவரும் பேரவை உறுப்பினருமான மு.க.ஸ்டாலின்.

எண்ணூர் முதல் முட்டுக்காடு வரையிலான 49 கிலோ மீட்டர் கால்வாயைத் தூர் வார வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் அன்னை சத்யா நகரில் உள்ள விநாயகர் கோயில் தெரு ஓடை, அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள ஓடை, ரெட்டேரி ஓடை , அம்பேத்கர் நகர் பிரதான சாலை ஓடை ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். 
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: சென்னை மாநகரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி, பொதுமக்களுக்கு பலவித தொல்லைகள் ஏற்பட்டுள்ளன.
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி குடிநீர் வாரியம், மின்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை போன்ற பல துறைகளின் அதிகாரிகளை எல்லாம் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் அழைத்து ஆலோசனை நடத்தினேன். மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், எவ்வளவு மழை பெய்தாலும் மழை நீர் தேங்கும் நிலை உருவாகி இருக்காது. 
முட்டுக்காடு வரையில்... எண்ணூரில் இருந்து முட்டுக்காடு வரையில் ஏறக்குறைய 49 கிலோமீட்டர் உள்ள கால்வாயைத் தூர்வாரி இருந்தால், சென்னை மாநகரில் எந்தவொரு இடத்திலும் தண்ணீர் தேங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். 
அந்தக் கால்வாய் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் அந்தத் துறை செயல்படுகிறது. 
தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் ஒருநாள் பெய்த மழைக்கே வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டதாகக் கேட்கிறீர்கள். கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாத மழையின் போதும், வர்தா புயலின்போதும் இந்த நிலை ஏற்பட்டது. அதன் பிறகாவது அந்தப் பகுதிகளில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com