வெள்ளை முடி பிரச்னையா? எளிய முறையில் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்து தீர்வு காணுங்கள்!

வயது ஆக ஆக முடி நரைப்பது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான் என்றாலும் இன்று இருக்கும் பிரச்னை இளநரை. பள்ளி செல்லும் குழந்தைகளின் தலையில் கூட இன்றைய சூழலில் வெள்ள முடியைப் பார்க்க முடிகிறது.
வெள்ளை முடி பிரச்னையா? எளிய முறையில் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்து தீர்வு காணுங்கள்!

வயது ஆக ஆக முடி நரைப்பது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான் என்றாலும் இன்று இருக்கும் பிரச்னை இளநரை. பள்ளி செல்லும் குழந்தைகளின் தலையில் கூட இன்றைய சூழலில் வெள்ள முடியைப் பார்க்க முடிகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி முடி கருமையாக இருப்பதற்கான காரணம் நமது உடலில் இருக்கும் மெலனின் நிறமி தான்.

வயது முதிர்ச்சி காரணமாக இந்த மெலனின் உற்பத்தி குறையும் போது நமக்கு வெள்ள முடி வருகிறது. அதே போல் இந்த மெலனின் உற்பத்தி குறைபாடு காரணமாகவே இளநரையும் ஏற்படுகிறது. இதைச் சரி செய்ய சில எளிய வீட்டு வைத்தியமே போதுமானது. 

ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற விஷயங்கள் நமது தலைமுடியை கடுமையாகச் சேதப்படுத்துகின்றன. இவை அனைத்திற்கும் மேலாகப் பல ரசாயனங்கள் கலந்த எண்ணெய்யைத் தலையில் தேய்ப்பதால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தவாறே தூய்மையான தேங்காய் எண்ணெய் தயார் செய்ய முடியும் என்றால் இனி என்ன பிரச்னை? 

இந்தத் தேங்காய் எண்ணெய்யை வெள்ளை முடி உள்ளவர்கள் மட்டுமில்லாமல், அனைவரும் பயன்படுத்துவதன் மூலம் வேறு பல தலை முடி தொடர்பான பிரச்சினைகளும் சரியாகும்.

தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

எவ்வளவு தேங்காய் எண்ணெய் தேவையோ அதற்கேற்ப நல்ல தேங்காய்களை தேர்வு செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

1. தேங்காய்களை உடைத்து அதை முழுவதுமாக துருவி எடுத்துக் கொள்ளவும்.

2. தேங்காய்த் துருவல்களை தண்ணீர் ஊற்றாமல் நன்கு மசிய அரைத்து ஒரு துணியில் போடவும்.

3. இப்போது அந்தத் துணியை மூட்டைக்கட்டி நன்கு பிழிந்து தேங்காய்ப் பாலை சேகரிக்கவும். மீந்த சக்கைகளில் சிறிது வெந்நீர் ஊற்றி முழுத் தேங்காய் பாலையும் பிழியவும்.

4. தேங்காய்ப் பாலை ஒரு அகண்ட பாத்திரத்தில் ஊற்றிக் குறைந்த சூட்டில் கொதிக்க வைக்கவும். சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை.

5. பாலின் நிறம் வெள்ளை நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறும் வரை கொதிக்க வைக்கவும். அடி பிடிக்கும் வாய்ப்பு உள்ளதால் பொறுமையாக களரிக் கொண்டே இருக்கவும்.

6. பின்னர் தீயை அனைத்துவிட்டு இந்தக் கலவையை அசைக்காமல் சூடாற செய்யவும். கடைசியாக ஒரு சுத்தமான துணியில் வெடிகட்டி சேமித்து வைக்கவும்.

இந்த எண்ணெய்யைத் தலையில் தேய்த்து வந்தால் நிச்சயம் உங்கள் முடி வளர்ச்சியிலும், ஆரோக்கியத்திலும் நல்ல மாற்றத்தைப் பார்க்க முடியும். வெள்ளை முடி பிரச்னை தீர இதில் இன்னும் சில எண்ணெய்களைச் சேர்த்து அந்தக் கலவையை உபயோகிக்கவும்.

வெள்ளை முடி வருவதைத் தடுக்க:

நீங்கள் வீட்டில் தயாரித்த இந்தத் தேங்காய் எண்ணெய்யில் கற்றாழை பசை ஒரு அரை மூடிச் சேர்க்கவும், மேலும் 2 மூடி நெல்லிக்காய் எண்ணெய்யை ஊற்றவும். இந்தக் கலவையை 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்த பிறகு அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து 8 நாட்கள் சூரிய ஒளியில் காய வைக்கவும்.

இந்தக் கலவையை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உங்கள் முடியின் வேர் கால்களில் படும்படி தேய்த்து மசாஜ் செய்து வந்தால் நரை முடி பிரச்னை சில மாதங்களிலேயே சரியாகிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com