மெடிந்தியா மருத்துவமனையில் சுகாதார பொம்மைக் கொலு

சுகாதாரத்தை வலியுறுத்தும் பொம்மைக் கொலு சென்னை நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்தை வலியுறுத்தும் பொம்மைக் கொலு சென்னை நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனைத் தலைவர் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் கூறியது: சுகாதாரத்தைப் பேணும் நகரங்கள் குறித்த சமீபத்திய ஆய்வில் 434 நகரங்களில் சென்னை 235-ஆவது இடத்தில் உள்ளது மிகவும் பின்னடைவு ஆகும். 
சென்னை மக்களுக்கு சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, கழிவறைப் பயன்பாடு, பழக்க வழக்கங்களில் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, மெடிந்தியா மருத்துவமனையின் சார்பில் தூய்மை இந்தியா இயக்கத்தின் ஓர் அங்கமாக சுகாதாரத்தை எவ்வாறு பேண வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் வகையிலும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு செய்ய வேண்டியவை குறித்தும் விளக்கும் பொம்மைக் கொலு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அக். 19-ஆம் தேதி வரை இடம்பெற்றிருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com