அஜீரண பிரச்னைக்கு என்ன செய்யலாம்?

அஜீரண பிரச்னை உள்ளவர்கள் சீரகத்துடன் மிளகு சேர்த்து லேசாக வறுத்து பொடித்து
அஜீரண பிரச்னைக்கு என்ன செய்யலாம்?
  • அஜீரண பிரச்னை உள்ளவர்கள் சீரகத்துடன் மிளகு சேர்த்து லேசாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். இதை சாதத்தில் சேர்த்து  சாப்பிட்டால் அஜீரணம் அகலும். நன்கு பசி வரும்.
  • சிறுநீர் சரியாகப் போகாமல் அவதிப்படுவோர் பிரண்டை துவையல் சாப்பிடலாம். பார்லியை கஞ்சி காய்ச்சி  குடிக்கலாம், இதனால் நீர்தாரளமாக வெளி யேறும்.
  • நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாழைப்பூ  பொரியல் செய்து சாதத்தில் சேர்த்து சாப்பிட்டு வர  சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
  • பப்பாளிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் குடற் புழுக்கள் அழிந்து, மலத்துடன் வெளிப்படும்.
  • முருங்கைப்பூவை  பொரியல்  செய்து சாப்பிட்டு வர கை, கால் மூட்டு வலி நீங்கும்.
  • அன்னாசிப்பழச்சாறுடன், கருப்பட்டி பொடித்திட்டு பருகிவர, மூளை சீராக இயங்கும். முதியவர்களுக்கான ஞாபக சக்தியைப் பெருக்க இது எளிய  இயற்கை மருந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com