ரத்தத்தை சுத்தம் செய்ய 7 டிப்ஸ்

பீட்ரூட் அடிக்கடி உணவில் சேர்த்து வர உடலில் ரத்தத்தைப் பெருக்கும்.
ரத்தத்தை சுத்தம் செய்ய 7 டிப்ஸ்

பீட்ரூட் அடிக்கடி உணவில் சேர்த்து வர உடலில் ரத்தத்தைப் பெருக்கும்.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து பருகினால் ரத்தம் சுத்தமடையும்.

தர்ப்பைப் புல் கஷாயம் பருகி வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

அத்திப்பழம் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர ரத்த விருத்தியடைந்து, உடல் பலம் பெறும்.

செம்பருத்திப் பூவில் உள்ள மகரந்தத்தை நீக்கிவிட்டு பூ இதழ்களை மட்டும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கி ரத்தம் விருத்தியடையும்.

இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரீச்சம்பழம், உருளைக் கிழங்கு, உலர் திராட்சை, உலர்ந்த அத்திப்பழம் ஆகியவற்றை அடிக்கடி அதிகம் சாப்பிட ரத்தம் சுத்தமாகும்.

ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதில் இரும்புச்  சத்து பெரும் பங்கு வகிக்கிறது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கும்  இரும்புச் சத்து உறுதுணையாக இருந்து, ரத்தம் மூலம் ஆக்ஸிஜன் செல்வதற்கு உதவி செய்கிறது.

கீரை, தேன், சுண்டைக்காய், முழு தானியங்கள், கிவி பழம், கேரட், பேரீச்சை, வெல்லம், முட்டை, ஈரல் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. ரத்த சோகையத் தவிர்க்கவும் ரத்தத்தை சுத்திகரிக்கவும் இவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com