தோலில் ஏற்படும் அரிப்பை எப்படி சரி செய்யலாம்?

சிலருக்கு தோலில் அடிக்கடி அரிப்பு ஏற்படும். அதை சரி செய்ய அடிக்கடி சொறிந்து கொள்ள
தோலில் ஏற்படும் அரிப்பை எப்படி சரி செய்யலாம்?

சிலருக்கு தோலில் அடிக்கடி அரிப்பு ஏற்படும். அதை சரி செய்ய அடிக்கடி சொறிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதுவும் பொது இடங்களில் அவ்வாறு செய்வது சங்கடத்தை ஏற்படுத்தும். இதற்கு சிறந்த தீர்வு வெட்சிப் பூ மருத்துவம். 

கொப்புளங்கள், அரிப்பு, தடிப்பு போன்ற தோல் நோய்களை சரிசெய்ய வெட்சி செடியின் இலைகளை அரைத்து பற்றுப்போட்டு வந்தால் விரைவில் 
குணமாகும். 

அடிபட்ட இடத்தில் மேல்பற்றாக வெட்சி செடியின் இலையைப் அரைத்துப் பற்றுப் போடும்போது புண்கள் விரைவில் ஆறிப்போகும்.

வெட்சி இலை இரண்டை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அத்துடன் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து குடித்து வர சளியை கரைத்து வெளியேற்றும். வயிற்றுப்போக்கை நிறுத்தும். 

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நீர்விடாமல் அரைத்த வெட்சிப் பூவை சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை வடிகட்டி பூசி வர தோல்நோய்கள் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். தலையில் தேய்த்து குளித்துவர பொடுகை தடுக்கிறது.

வெட்சிப்பூ தேநீரை காலை, மாலை இருவேளை அருந்தி வர உடல் சோர்வு, காய்ச்சல், கழிச்சல், சீத கழிச்சல் ஆகியவை குணமாக்கும்.

வெட்சிப் பூவை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும். கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும். புற்றுநோய் வராமல் தடுக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com