சென்னையில் நரம்பியல் நிபுணர்களின் சர்வதேச மாநாடு

நரம்பியல் நிபுணர்களின் சர்வதேச மாநாடு சென்னையில் வியாழக்கிழமை (செப்.7) தொடங்க உள்ளது.

நரம்பியல் நிபுணர்களின் சர்வதேச மாநாடு சென்னையில் வியாழக்கிழமை (செப்.7) தொடங்க உள்ளது.
இந்திய நரம்பியல் நிபுணர்களின் அகாதெமியின் 25-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த மாநாடு நடைபெற உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் மாநாடு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அகாதெமியின் தலைவர் டாக்டர் ஏ.வி. சீனிவாசன், மாநாடு ஒருங்கிணைப்புத் தலைவர் டாக்டர் சி.யு.வேல்முருகேந்திரன், செயலாளர் டாக்டர் யு.மீனாட்சி சுந்தரம், ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
இந்திய நரம்பியல் நிபுணர்கள் அகாதெமியும், அமெரிக்காவில் உள்ள இந்திய நரம்பியல் நிபுணர்களின் சங்கமும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. செப்டம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 1,800 நரம்பியல் நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
நரம்பியல் தொடர்பான பிற நரம்பியல் வேதியியல், நரம்பியல் உளவியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர். 
400-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. மேலும் வலிப்புநோய், பக்கவாதம், தலைவலி, நோய்த்தொற்று, முதுக்குத்தண்டு நரம்பியல், ஒற்றைத் தலைவலி உள்ளிட்டவை குறித்து சிறப்பு அமர்வுகளும் இடம்பெற உள்ளன என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com