நுண்துளை அறுவை சிகிச்சைக்கு நவீன நுண்ணோக்கி அறிமுகம்

நுண்துளை அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் அதிநவீன நுண்ணோக்கி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நுண்துளை அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் அதிநவீன நுண்ணோக்கி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரஷாந்த் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நுண்ணோக்கியின் மூலம் நுண்துளை அறுவை சிகிச்சைகளை மேலும் துல்லியமாக மேற்கொள்ள முடியும். இதுதொடர்பாக, மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி.கீதா பிரியா சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
40 எக்ஸ் நுண்ணோக்கி என்று அழைக்கப்படும் இந்த நுண்ணோக்கி, உடல் பாகங்களை வெறும் கண்களால் பார்ப்பதைவிட 40 மடங்கு பெரிதாக்கி காண்பிக்கும். இதன் உதவி கொண்டு ரத்தநாளங்கள் இணைப்பு, நரம்புகளை சீராக்குதல் உள்ளிட்ட சிகிச்சைகளை எளிதில் செய்ய முடியும். சருமத்தின் கீழே உள்ள நிணநீர் நாளங்களைப் பார்ப்பதற்கும், ஒரு மில்லிமீட்டர் அளவுக்கும் குறைவான ரத்தநாளங்களை சீராக்கவும் முடியும்.
மேலும், இந்த நுண்ணோக்கியில் பொருத்தப்பட்டுள்ள லென்ஸ் மூலம் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை, மார்பகம், சிறுநீர் பாதை, மூளை உள்ளிட்ட உறுப்புகளில் எளிதாக அறுவை சிகிச்சை செய்ய முடியும். துல்லியம் மற்றும் நிபுணத்துவம் கொண்ட இந்த நுண்ணோக்கியின் உதவி கொண்டு, மருத்துவமனையில் பலவகைப்பட்ட நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com