மாணவி அனிதா தற்கொலை எதிரொலி: சென்னையில் மாணவர்கள் போராட்டம் நீடிப்பு

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்கும் வகையிலும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் சென்னையில் கல்லூரி மாணவர்களின் போராட்டம் வியாழக்கிழமையும் நீடித்தது.
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும், மத்திய -மாநில அரசுகளைக் கண்டித்தும் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும், மத்திய -மாநில அரசுகளைக் கண்டித்தும் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்கும் வகையிலும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் சென்னையில் கல்லூரி மாணவர்களின் போராட்டம் வியாழக்கிழமையும் நீடித்தது.
நீட் தேர்வால் எம்.பி.பி.எஸ். படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு நீதி கேட்கும் வகையிலும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கடந்த 2 -ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்தப் போராட்டங்கள் சென்னையிலும் நடைபெற்று வருகின்றன.கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக வியாழக்கிழமையும் சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்துச் செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
எழும்பூர் அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்திலேயே அனிதாவின் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கேயே அனிதா தற்கொலைக்கு நீதி கேட்கும் வகையில் கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல ராயப்பேட்டை புதுக் கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி முன் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கிடையே போராட்ட அச்சுறுத்தலின் காரணமாக, சென்னையில் பல கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. இதனால், வியாழக்கிழமை குறைவான இடங்களிலேயே போராட்டங்கள் நடைபெற்றன. 
சென்னையில் வியாழக்கிழமை மொத்தம் 26 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. 3 இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 93 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 12 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதேவேளையில், 23 இடங்களில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டம், தர்னா போராட்டம், நினைவு அஞ்சலி ஆகியவற்றில் 376 பெண்கள் உள்பட 2,221 பேர் பங்கேற்றனர்.
போராட்ட அச்சுறுத்தலின் காரணமாக, சென்னை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. மெரீனா கடற்கரையில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை மாலை வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. மெரீனா கடற்கரை முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com