பற்கள் கறை நீக்க என்ன செய்யலாம்?

பற்கள் கறை படிந்தும், மஞ்சளாகவும் இருப்பதற்குப் பாரம்பரிய காரணங்களுடன், அடிக்கடி
பற்கள் கறை நீக்க என்ன செய்யலாம்?


பற்கள் கறை படிந்தும், மஞ்சளாகவும் இருப்பதற்குப் பாரம்பரிய காரணங்களுடன், அடிக்கடி தேநீர், காபி அருந்துவது, புகைப்பிடிப்பது போன்றவற்றாலும் வரும். இதற்காக சிலர் அடிக்கடி பல் மருந்துவரிடம் பிளீச் செய்து சுத்தமாக்கி கொள்வார்கள்.  அது கேடு விளைவிக்க கூடியது.  மஞ்சள் கறையினை நீக்க பல இயற்கை வழிகள் உள்ளன.  

எலுமிச்சை சாருடன் உப்புக் கலந்து பற்களை சில நிமிடங்கள் தேய்த்து வந்தால் நல்லது. பின் குளிர் நீரில் நன்கு கொப்பளித்தால் கறை போய்விடும் 

தினம் ஓர் ஆப்பிள் சாப்பிட்டு வந்தாலும் கறைகள் நீங்கும்.

உப்பை அதிகம் பயன்படுத்தாமல், சாதாரண சுத்த சாம்பலைக் கொண்டு  வாரம் ஒருமுறை தேய்த்தாலும் கறைகள் நீங்கும்

ஆரஞ்சுப்பழத் தோலைக் கொண்டு இரவில் பல் தேய்த்தால் கறைகள் நீங்கும்.

- ஜி. சந்திரகாந்தா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com